For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆண்மை இருக்கிறதா?.. தேஜ்பாலுக்கு மருத்துவப் பரிசோதனை

Google Oneindia Tamil News

Tehelka case: Tarun Tejpal taken for sexual potency test
பனாஜி: பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெஹல்கா நிறுவனர் தரும் தேஜ்பாலுக்கு ஆண்மைப் பரிசோதனை செய்வதற்காக அவரை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

கோவாவில் உள்ள மருத்துவமனையில் வைத்து இந்த சோதனை நடைபெற்றது. பாலியல் பலாத்கார வழக்குகளில் இந்த பரிசோதனையானது முக்கியமானது என்பதால் தேஜ்பாலுக்கு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

50 வயதாகும் தேஜ்பால், கோவா ஹோட்டலில் நடந்த டெஹல்கா நிறுவன நிகழ்ச்சியின்போது, தனது நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் பத்திரிக்கையாளரிடம் தவறாக நடந்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து தேஜ்பால் மீது கோவா போலீஸார் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து பின்னர் அவரை பெரும் போராட்டத்திற்குப் பின்னர் கைது செய்தனர்.

தற்போது 6 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார் தேஜ்பால். அவருக்கு இன்று ஆண்மைப் பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்தப் பரிசோதனை பல கட்டமாக நடைபெறும். உறுப்பு எழுச்சி, வி்ந்தனு அளவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இதில் பரிசோதிக்கப்பட்டு அதன் அடிப்படையில் குற்றவாளியால் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முடியுமா என்ற முடிவை டாக்டர்கள் குழு அறிக்கையாக அளிக்கும். அதன் அடிப்படையில்தான் வழக்கு நிற்கும் என்பதால் இந்த பரிசோதனை முக்கியத்துவம் பெறுகிறது.

English summary
Tarun Tejpal, arrested for rape in Goa, was taken this morning for a sexual potency test, mandatory in cases of sexual assault. Mr Tejpal, 50, is the founder of investigative news-magazine Tehelka. He was arrested on Saturday for allegedly raping a younger colleague last month at a five-star hotel in Goa during an annual Tehelka conference.lice filed its case against Mr Tejpal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X