For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேத மந்திரங்கள் முழங்க குண்டு துளைக்காத பாத்ரூமுடன் கூடிய வீட்டுக்கு குடிபெயர்ந்தார் சந்திரசேகர ராவ்

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் குண்டு துளைக்காத வகையில் பிரத்யோகமாக கட்டப்பட்ட வீட்டிற்கு இன்று குடிபெயர்ந்துள்ளார்.

Google Oneindia Tamil News

ஹைதராபாத் : தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முழுமுழுக்க குண்டு துளைக்காத வகையில் பலகோடி ரூபாய் செலவில் கட்டுப்பட்டுள்ள புதிய வீட்டிற்கு இன்று காலை குடிபெயர்ந்தார்.

குண்டுதுளைக்காத கப்பல் போன்ற கார், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள குண்டு துளைக்காத பென்ஸ் நிறுவன பஸ், எப்போதும் துப்பாக்கி ஏந்திய இசட் ப்ளஸ் பாதுகாவலர்கள் என தனக்கென ஒரு பெரிய பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி வைத்திருப்பவர் தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ். இதற்காகவே பலமுறை செய்திகளில் பரபரப்பாக பேசப்பட்டவர்.

தற்போது தெலுங்கானா மாநிலம் பேகம்பேட் என்ற இடத்தில் 9 ஏக்கர் பரப்பளவில் பல பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வீட்டை கட்டி வேதமந்திரங்கள் முழங்க குடிபெயர்ந்துள்ளார்.

அரண்மனை போன்ற வீடு...

அரண்மனை போன்ற வீடு...

ஒரு லட்சம் சதுர அடியில் 9 ஏக்கர் பரப்பளவில் அரண்மனை போன்று பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது சந்திரசேகர ராவின் இந்த புதிய வீடு... 50 கோடி ரூபாய் செலவில் வீடு மற்றும் அலுவலகம் சேர்ந்தார் போல் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில் உயர்தர மார்பல்ஸ் கண்ணாடிகள் என அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டவை என கூறப்படுகிறது.

குண்டு துளைக்காத ஜன்னல்கள்...

குண்டு துளைக்காத ஜன்னல்கள்...

நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் காராணமாக வீட்டில் உள்ள ஜன்னல்கள் மற்றும் குளியலறைகள் உட்பட அனைத்து அறைகளுமே குண்டுதுளைக்காதவாறு உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சம் சதுர அடி உள்ள இந்த வீட்டில் 250 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் நவீன திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

பிரமாண்ட அறை...

பிரமாண்ட அறை...

அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாட பிரமாண்ட விருந்தினர் அறை அமைக்கப்பட்டுள்ளது. சிறிய தலைமைச்செயலகம் போன்ற அமைப்புடன் வீட்டின் ஒரு பகுதியில் சகல வசதிகளுடன் அலுவலமும் அமைக்கப்பட்டுள்ளது.

குளியல் அறையிலும்..

குளியல் அறையிலும்..

மேலும் குண்டுதுளைக்காத வகையில் குளியல் அறையும் கட்டப்பட்டுள்ளதாம். இது தெலுங்கானா அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த வீடு ரத்தன் டாடா நிறுவனத்தில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட சைரஸ் மிஸ்ட்ரிக்கு சொந்தமான நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ளது. முதல்வர் சந்திர சேகர ராவுக்கு சொந்த ஊரில் ஒரு வீடும் ஹைதராபாத்தில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பண்ணை வீடும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Telangana CM Chandra Sekar Rao Moves into a New House completely with bullet proof windows. This home worth Rs 50 crores in 9 acre
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X