For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிராமண குருக்களை திருமணம் செய்து கொண்டால் ரூ.3 லட்சம் ரொக்கம்.. தெலுங்கானா அரசு அதிரடி அறிவிப்பு

பிராமண குருக்களை திருமணம் செய்து கொள்ளும் மணமகள்களுக்கு 3 லட்சம் ரூபாய் நிதியளிக்கப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: பிராமண குருக்களை திருமணம் செய்து கொள்ளும் மணமகள்களுக்கு 3 லட்சம் ரூபாய் நிதியளிக்கப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் உள்ள கோவில் குருக்களுக்கு திருமணம் நடைபெறுவது பெரும் சிக்கலாகா உள்ளது. குருக்கள் மற்றும் வேதம் ஓதும் நபர்களுக்கு குறைந்தளவு ஊதியம் வழங்கப்படுவது இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

மேலும் வேதம் ஓதுபவர்களையும் கோவிலில் குருக்களாக பணிபுரிபவர்ளையும் சமுதாயம் ஏளனமாக பார்ப்பதாக குருக்கள் சங்கதினர் புகார் அளித்தனர். இந்நிலையில் தெலுங்கானா பிராமண சம்க்ஷமா பரிஷத் அமைப்பின் கூட்டம் அதன் தலைவர் கேவி ரமணச்சாரி தலைமையில் தலைமைச்செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

குருக்களுக்கு பெண் இல்லை

குருக்களுக்கு பெண் இல்லை

இதில் தெலுங்கானா பிராமண சம்க்ஷமா பரிஷத் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது கோவிலில் ஆன்மீக பணியாற்றும் குருக்களுக்கும் வேதம் ஓதுபவர்களுக்கும் யாரும் பெண் கொடுப்பதில் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

பிராமணர்களுக்கு பிரச்சனை

பிராமணர்களுக்கு பிரச்சனை

குருக்களுக்கு குறைவான ஊதியம் கொடுப்பதும், சமுதாயத்தில் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையே இதற்கு காரணம் என்றும் அப்போது குற்றம்சாட்டப்பட்டது. இது பிராமண குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

மணமகள்களுக்கு பரிசு

மணமகள்களுக்கு பரிசு

இதையடுத்து கோவில் குருக்கள் மற்றும் வேத பண்டிட்களை திருமணம் செய்துகொள்ளும் மணமகள்களுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். இதனை தெலுங்கானா பிராமண சம்க்ஷமா பரிஷத் அமைப்பும் உறுதி செய்துள்ளது.

ஃபிக்ஸடு டெப்பாஸிட்

ஃபிக்ஸடு டெப்பாஸிட்

திருமணத்திற்கு பின் இருவரின் பெயரிலும் ஜாய்ன்ட் அக்கவுன்ட் தொடங்கப்பட்டு ஃபிக்ஸடு டெபாஸிட்டாக 3லட்சம் ரூபாய் இருப்பு வைக்கப்படும். தம்பதிகள் திருமணமாகி 3 ஆண்டுகள் கழித்தே இந்த தொகையை பெறமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருக்களுக்கு சலுகை

குருக்களுக்கு சலுகை

மேலும் திருமண செலவுக்காக முன்கூட்டியே ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிராமணர் தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்களை ஊக்குவிப்பதற்காக பிராமண தொழில்துறை கைத்தொழில் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது.

பிராமணர்களுக்கு நலத்திட்டங்கள்

பிராமணர்களுக்கு நலத்திட்டங்கள்

இதுதொடர்பாக விண்ணப்பங்கள் அனுப்பிய 59 பேருக்கு 3.29 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. 10 ஆம் வகுப்பு, இண்டர், டிகிரி மற்றும் பி.ஜி படிக்கும் 252 பிராமண மாணவர்களுக்கு தெலங்கானா அரசு நிதியுதவி வழங்கியுள்ளது.

ஏழை பிராமணர்களுக்கு வேண்டுகோள்

ஏழை பிராமணர்களுக்கு வேண்டுகோள்

வெளி நாடுகளில் உயர் கல்வியில் ஆர்வம் கொண்ட 56 பிராமண மாணவர்களுக்கு ரூ. 1.16 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் மற்றும் சுகாதாரத் திட்டங்களும் ஏழை பிராமணர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அரசின் இந்த நலத்திட்டங்களை ஏழை பிராமணர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெலுங்கானா பிராமண சம்க்ஷமா பரிஷத் அமைப்பு வேண்டுகோள்விடுத்தது.

English summary
Telangana Chief Minister K Chandrasekhar Rao took a decision to offer Rs 3 lakh to the brides who marry Brahmin veda pundits and priests. This news was officially confirmed by TBSP (Telangana Brahmin Samkshema Parishad), which announced plans to deposit Rs 3 lakhs in the joint accounts of newly married couples where the groom is a Brahmin priest. The couple will also be given Rs 1 lakh as wedding expenses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X