For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குளிர்கால கூட்டத்தொடரில் தனித்தெலுங்கானா மசோதா, இல்லையேல் மீண்டும் போராட்டம்: சுஷ்மா எச்சரிக்கை

Google Oneindia Tamil News

ஐதராபாத்: எதிர்வரும் குளிர்கால கூட்டத் தொடரின்போது தனித்தெலுங்கானா மசோதாவை நிறைவேற்றி மாநிலத்தை பிரித்து தர வேண்டும் என சுஷ்மா சுவராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று, ஆந்திர ஐதராபாத்தில் உள்ள மஹ்பூப் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜ். அப்போது பொதுகூட்டத்தில் அவர் பேசியதாவது...

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு...

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு...

தெலுங்கானா மற்றும் ராயலசீமா பகுதிகளை உள்ளடக்கிய சீமாந்திரா பகுதி மக்களிடையே மத்திய அரசு இன்னும் இரண்டு மாதங்களுக்குள் மத்திய அரசு பேச்சுவார்த்தை மூலம் சமரச தீர்வு காண முன்வர வேண்டும்.

குளிர்கால கூட்டத் தொடர்....

குளிர்கால கூட்டத் தொடர்....

எதிர்வரும் குளிர்கால கூட்டத் தொடரின்போது தனித்தெலுங்கானா மசோதாவை நிறைவேற்றி மாநிலத்தை பிரித்து தர வேண்டும்.

ஐதராபாத் தலைநகர்...

ஐதராபாத் தலைநகர்...

ஐதராபாத்தை தலைநகராக கொண்டு 10 மாவட்டங்கள் உள்ளடங்கிய தனித்தெலுங்கானா மாநிலம் அமைக்கப்பட வேண்டும்.

வெற்றி விழா....

வெற்றி விழா....

அவ்வாறு தனித்தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் பட்சத்தில் அந்த வெற்றி விழாவில் உங்களை மீண்டும் சந்திக்க நான் இங்கு வருவேன்.

இரண்டாம் கட்ட போராட்டம்...

இரண்டாம் கட்ட போராட்டம்...

மத்திய அரசின் முடிவுக்கு எதிராக ஆந்திராவை ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல் மந்திரியே பேசி வரும் சூழ்நிலையில், குளிர்கால கூட்டத்தொடரின் போது தனித்தெலுங்கானா மசோதாவை நிறைவேற்ற தவறினால் பா.ஜ.க. சார்பில் தனித்தெலுங்கானா கோரிக்கைக்கான இரண்டாம் கட்ட போராட்டத்தில் பங்கேற்க நான் மீண்டும் இங்கு வருவேன்' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Amid political turbulence over the division of Andhra Pradesh, the BJP leader Sushma Swaraj is set to visit Telangana region and address a public meeting in Mahbubnagar on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X