For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பீகாரில் "மாடு"டன் சேர்த்து பா.ஜ.க.வுக்கு 58 இடங்கள்.. தி டெலிகிராப் ஏடு வெளியிட்ட 'நச்' கிராபிக்ஸ்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் மாட்டிறைச்சி விவகாரம் பிரதானமாக இடம்பெற்றிருந்த நிலையில் தி டெலிகிராப் ஏடு பாஜக கூட்டணியில் மாடுவையும் சேர்த்து 58 இடங்கள் என கிராபிக்ஸ் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது.

பீகார் சட்டசபை தேர்தல் களத்தில் மாட்டிறைச்சி உண்பதற்கு ஆதரவாக, எதிராக வாத பிரதிவாதங்கள் இடம்பிடித்தன. ஒருகட்டத்தில் இந்த தேர்தல் மாட்டிறைச்சி சாப்பிடுவோருக்கும் மாட்டிறைச்சி சாப்பிடாதோருக்குமான தேர்தல் என்றெல்லாம் கூட விஸ்வரூபமெடுத்தது.

இந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி அதிரடியான வெற்றியைப் பெற்றுள்ளது. மொத்தம் 178 இடங்களை அந்த அணி கைப்பற்றியுள்ளது.

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமே 58 இடங்களில்தான் வென்றுள்ளது. இதை விவரிக்கும் கிராபிக்ஸ் காட்சியில் தி டெலிகிராப் ஏடு மாட்டிறைச்சி அரசியலைக் குறிக்கும் "மாடு" படத்தையும் பாஜக கூட்டணியில் சேர்த்து மொத்தம் 58 இடங்கள் என போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The Telegraph daily's front page graphics showed BJP lead NAD alliance with the cow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X