For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பை மழையில் சிக்கி.. மகிந்திரா கம்பெனி ஓனருக்கு வந்த சோகத்தைப் பாருங்க! #MumbaiRains

மும்பையில் பெய்து வரும் கனமழையால் தான் தண்ணீரில் மூழ்கும் நிலையில் உள்ளதாக மகிந்திரா நிறுவன சேர்மன் ஆனந்த் மகிந்திரா டிவீட் போட்டுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

மும்பை : மும்பையை புரட்டிப் போட்டிருக்கும் பேய் மழையால் தான் தண்ணீருக்குள் மூழ்கி வருவதாகவும் டெல்லியில் நடக்கும் இந்திய ஆஸ்திரேலிய கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்றும் மகிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகிந்திரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

மும்பையில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருவதால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது நீண்ட நேரம், கனமழை பெய்து வருவதாக வானிலை மையம் கூறியுள்ளது.

கடந்த 48 மணி நேரத்தில் மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில் சராசரிக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

மிதந்து செல்லும் வாகனங்கள்

கனமழையுடன் கடுமையான காற்றும் வீசுவதால் இன்று மாலை அதிக உயரத்திற்கு கடல் அலைகள் எழும்ப வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வெள்ள நீரில் மூழ்கியுள்ள சாலைகளில் வாகனங்கள்,மிதந்தபடி செல்கின்றன.

 மழையில் சிக்கிய ஆனந்த் மகிந்திரா

மழையில் சிக்கிய ஆனந்த் மகிந்திரா

இந்நிலையில் மகிந்திரா நிறுவன சேர்மன் ஆனந்த் மகிந்திரா மழை குறித்த தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அவருடைய காரில் இருந்து எடுக்கப்பட்ட அந்தக் காட்சியில் கண்ணாடியை முழுவதும் மறைக்கும் வகையில் மழை வெளுத்து வாங்குகிறது.

பயணம் ரத்து

சூறாவளி போன்ற சீதோஷ்ண நிலையால் கடுமையான மழை பெய்கிறது. டெல்லியில் நடைபெற இருந்த இந்திய ஆஸ்திரேலிய கூட்டத்திற்கான விமான பயணத்தை ரத்து செய்கிறேன். என்னுடைய ஆஸ்திரேலிய நண்பர்களுக்கு இந்த செய்தியை சொல்லிக் கொள்கிறேன்.

அடுத்த 24 மணி நேரத்தில்

மும்பை நகர் மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை, மிகவும் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

English summary
Typhoon-like weather.Cancelling my flight to Delhi for an Indo Australian meeting.Telling my Aussie friends I'm 'Down Under' water in Mumbai tweeted Anand mahindra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X