For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்திரபாபு நாயுடுக்கு வந்த சோதனை.. முன்னாள் முதல்வருக்கு ஒய்எஸ்ஆர் காங். எம்எல்ஏ உத்தரவால் பரபரப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Chandrababu Naidu: முன்னாள் முதல்வருக்கு ஒய்எஸ்ஆர் காங். எம்.எல்.ஏ உத்தரவால் பரபரப்பு- வீடியோ

    அமராவதி: பங்களாவை காலி செய்யுமாறு சந்திரபாபு நாயுடுவை நிர்பந்தித்தால் நீதிமன்றத்திற்கு செல்வோம் என தெலுங்கு தேசம் கட்சி ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கடந்த லோக்சபா தேர்தலில் ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றது. ஆனால் ஆளும் கட்சியாக இருந்த தெலுங்கு தேசம் வெறும் 23 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

    இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றார். இந்த நிலையில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள உண்டவள்ளி கிராமத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள பங்களாவை சந்திரபாபு நாயுடு காலி செய்ய வேண்டும் என ஒய்எஸ்ஆர் கட்சியின் மங்களகிரி தொகுதியின் எம்எல்ஏ ராமகிருஷ்ண ரெட்டி வலியுறுத்தியிருந்தார்.

    அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே.. தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கிய டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே.. தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கிய டொனால்ட் டிரம்ப்

    ஹைதராபாத்

    ஹைதராபாத்

    தெலுங்கானா மாநிலம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட பின்னர் ஆந்திர மாநிலத்திற்கான நிர்வாகம் ஹைதராபாத்திலிருந்து விஜயவாடாவுக்கு மாறியது. அந்த சமயம் கிருஷ்ணா நதிக்கரையில் கட்டப்பட்டிருந்த தனியார் வீட்டை சந்திரபாபு நாயுடு அரசு முதல்வரின் அலுவலக பணிகளுக்காக லீசுக்கு எடுத்தது.

    சந்திரபாபு நாயுடு

    சந்திரபாபு நாயுடு

    இதைத் தொடர்ந்து அங்கு பிரஜா வேதிகா என்ற பெயரில் ஆலோசனை கூட்டங்களுக்காக வீட்டை கட்டினார். இந்த வீடு சுற்றுச்சூழலுக்கு புறம்பாக இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் ராமகிருஷ்ண ரெட்டி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வீட்டில் தங்குவதற்கு அனுமதி வேண்டும் என சந்திரபாபு நாயுடு அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    பதில் இல்லை

    பதில் இல்லை

    அரசு தரப்பில் இன்னும் பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் பங்களாவை சந்திரபாபு நாயுடு காலி செய்ய வேண்டும் என எம்எல்ஏ ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.

    நியாயம்

    நியாயம்

    இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சி கூறுகையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கட்டாயப்படுத்தி வெளியேற்றினால் எங்களுக்கு வேறு வழியில்லை. ஆனால் சட்டரீதியிலாக அணுகி நியாயத்தை பெறுவோம் என கூறியிருந்தனர்.

    English summary
    Telugu Desam Party says that we will go to court if Former CM Chandra Babu Naidu made to vacate house.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X