For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெலுங்கு எங்கள் தாய் போன்றது.. நெஞ்சை தொட்ட பிரதமர் மோடி!

தெலுங்கு எங்கள் தாய் போன்றது என கூறி தெலுங்கு தேசம் கட்சியின் குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி பதில் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: தெலுங்கு எங்கள் தாய் போன்றது என கூறி தெலுங்கு தேசம் கட்சியின் குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி பதில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்த தெலுங்கு தேசம் கட்சி பிரதமர் மோடி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டியது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக கூறிய பிரதமர் மோடி ஆந்திராவை வஞ்சித்துவிட்டதாக அக்கட்சி எம்பிக்கள் விவாதத்தின் போது குற்றச்சாட்டுக்களை அடுக்கின.

டிடிபிக்கு பதிலடி

டிடிபிக்கு பதிலடி

இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி பதில் கொடுத்துவருகிறார். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட 3 மாநிலங்களும் வளர்ச்சி பாதையில் செல்கின்றன என்றார்.

தெலுங்கு எங்கள் தாய் போன்றது

தெலுங்கு எங்கள் தாய் போன்றது

ஆந்திர மக்களின் விருப்பங்களை மதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தெலுங்கு எங்கள் தாய் போன்றது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

ஆந்திராவுக்கு சிறப்பு நிதி

ஆந்திராவுக்கு சிறப்பு நிதி

ஆந்திரா, தெலுங்கானா இரு மாநில வளர்ச்சிக்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். சிறப்பு அந்தஸ்து மூலமாக ஆந்திராவுக்கு சிறப்பு நிதி வழங்கப்பட்டு வருகிறது.

எம்பிக்கள் முழக்கம்

எம்பிக்கள் முழக்கம்

ஆந்திரா-தெலுங்கானா பிரிவின் நன்மையை விரைவில் நீங்கள் அறிவீர்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார். ஆனால் மோடியின் பதிலுரையில் திருப்தியடையாத தெலுங்கு தேசம் எம்பிக்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர்.

'வீ வான்ட் ஜஸ்டிஸ்'

'வீ வான்ட் ஜஸ்டிஸ்'

'வீ வான்ட் ஜஸ்டிஸ்' என்று தெலுங்கு தேசம் எம்பிக்கள் தொடர் கோஷம் எழுப்பிய வண்ணம் இருந்தனர். கோஷத்திற்கு நடுவே மோடி பதில் உரை நிகழ்த்தினார்.

English summary
PM Modi says Telugu is like our Mother. Modi has responded for TDP accusation. But TDP MPs are shouted in the loksabha while his speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X