For Daily Alerts
Just In
ஜம்மு காஷ்மீரில் இந்து கோவில்கள் சேதத்தால் பதற்றம்..... இணைய சேவை முடக்கம்
ஸ்ரீநகர்: இந்துகோவில்கள் சேதப்படுத்தப்பட்டதால் ஜம்மு காஷ்மீரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
ஜம்மு அருகே உள்ள ரூப்நகரில் அமைந்துள்ள பழமையான சிவன் கோவிலை தோடா மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 14-ந்தேதி சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் அங்கு பெரும் போராட்டங்களும், வன்முறையும் மூண்டன.

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இதனிடையே நானக் நகரிலும் ஒரு கோவில் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதனால் அங்கு அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து போராட்டங்கள் வெடிக்காமல் இருக்க அம்மாநில அரசு இணையசேவையை உடனடியாக முடக்கியுள்ளது.