For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

200 யானைகளுக்கு சமமான ஜி சாட் 19 செயற்கைகோளின் 10 முக்கிய அம்சங்கள்!

அதிக எடைகொண்ட ஜி.சாட்-19 தகவல்தொடர்பு செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

Google Oneindia Tamil News

ஸ்ரீஹரிகோட்டா: முதல் முறையாக அதிக எடைகொண்ட ஜி.சாட்-19 தகவல்தொடர்பு செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. முழுமையாக வளர்ச்சி பெற்ற 200 யானைகளுக்கு சமமான இந்த செயற்கைக்கோள் 10 முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

அதிக எடை கொண்ட ஜி சாட் 19 செயற்கைக்கோள் இன்று மாலை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுன்ட்டவுன் நேற்று மாலை தொடங்கியது.

தயார் நிலையில் உள்ள செயற்கைகோள் மற்றும் வானிலை நிலவரங்கள் குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஜி சாட் செயற்கைக்கோளின் 10 முக்கிய அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

எடை 3,136 கிலோ

எடை 3,136 கிலோ

முதல் முறையாக ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் ஏவப்படும் அதிக எடைகொண்ட செயற்கைக்கோள் ஜிசாட் 19 ஆகும். இதன் எடை 3,136 கிலோ ஆகும். இது முழுமையாக வளர்ச்சிப் பெற்ற 200 யானைகளுக்கு சமமாகும்.

மூன்று மோட்டார்கள்

மூன்று மோட்டார்கள்

இந்த ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூன்று மோட்டார்களை கொண்டுள்ளது. 2 திட நிலை மற்றும் ஒரு திரவ நிலை மோட்டார்கள்.

13 செயற்கைக்கோள்கள்

13 செயற்கைக்கோள்கள்

இந்த ஒற்றை செயற்கைக்கோள் வெற்றி பெற்றால் ஏற்கனவே உள்ள 6-7 பழைய தகவல்தொடர்பு செயற்கைக்கோளுக்கு இது சமமாகும். தற்போது புவி வட்டப்பாதையில் 41 இந்திய செயற்கைக்கோள்களில் 13 செயற்கைக்கோள்கள் தகவல் தொடர்பு செயற்கை கோள்கள் ஆகும்.

இணையதள சேவைகளை பெற

இணையதள சேவைகளை பெற

முதன்முறையாக விண்வெளி சார்ந்த இணையதள சேவைகளை பெற இந்த செயற்கைக்கோள் பயன்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த செயற்கைக்கோள் ஒரு கேம் சேஞ்சர் என கூறப்படுகிறது.

இடங்களை சேர்க்கும் தளம்

இடங்களை சேர்க்கும் தளம்

உடனடியாக இணையதள சேவை வழங்கப்படாவிட்டாலும் இணையதளத்தின் முதுகெலும்பாக மற்ற நாட்டின் மற்ற இடங்களை சேர்க்கும் தளமாக இந்த செயற்கைக்கோள் முதலில் செயல்படும்.

சோதனை படுக்கையாக

சோதனை படுக்கையாக

மூன்று டன்னிற்கும் அதிகமான எடையுள்ள ஜிசாட்-19 செயற்கைக்கோள், இந்தியாவில் இருந்து தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய செயற்கைகோள் இதுவாகும். பல புதிய தொழில்நுட்பங்களுக்கு சோதனை படுக்கையாக இது பார்க்கப்படுகிறது.

லித்தியம் அயன் பேட்டரிகளில்

லித்தியம் அயன் பேட்டரிகளில்

ஜிசாட்- 19 உள்நாட்டு ரீதியில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட லித்தியம் அயன் பேட்டரிகளில் இயங்கும். இதே போன்ற பேட்டரிகள் பின்னர் கார்கள் மற்றும் பேருந்துகள் போன்ற மின் மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்படும்.

கதிர்வீச்சின் தன்மை குறித்து

கதிர்வீச்சின் தன்மை குறித்து

இஸ்ரோவின் படி, ஜிசாட் "ஜியோஸ்டேஷன் கதிர்வீச்சு ஸ்பெக்ட்ரோமீட்டர், சுமைகளை சார்ஜ் செய்யும் துகள்களின் தன்மை மற்றும் செயற்கைக்கோள்கள் மற்றும் அவற்றின் மின்னணு பாகங்கள் மீது விண்வெளி கதிர்வீச்சின் தன்மை குறித்து ஆய்வு செய்கிறது".

நவீன தொழில்நுட்பங்கள்

நவீன தொழில்நுட்பங்கள்

ஜிசாட் 19 செயற்கைக்கோள் மைக்ரோ எலெக்ட்ரோ-மெக்கானிக்கல் சிஸ்டம்ஸ், ஆக்ஸ்லரோமீட்டர் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. எதிர்கால திட்டங்களுக்கு இது முக்கிய பங்களிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரான்ஸ்பான்டர்கள் இல்லை

டிரான்ஸ்பான்டர்கள் இல்லை

ஜிசாட்-19 செயற்கைக்கோளில் டிரான்ஸ்பான்டர்கள் இல்லை, அதற்கு பதிலாக அது பல அதிர்வெண்களை பயன்படுத்தப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் தெரிவித்த கருத்துப்படி, இந்த அம்சம் இஸ்ரோ சேட்டிலைட்களுக்கு மேலும் தகவல்களை சேகரிக்க அனுமதிக்கும்.

English summary
The GSAT-19's satelite will launched today. This satelite has ten great features.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X