For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலையில் மீண்டும் பதட்டம்.. இன்றும் 2 பெண்கள் சன்னிதானத்துக்குள் நுழைய முயற்சி

சபரிமலையில் 2 பெண்களால் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இன்றும் பெண்கள் நுழைய முயற்சி.. சபரிமலையில் மீண்டும் பதட்டம்- வீடியோ

    சபரிமலை: 2 பெண்கள் இன்று சபரிமலை சன்னிதானத்துக்குள் செல்ல முயன்றதால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டிருந்தது. பாலின பாகுபாடுகள் களையப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த உத்தரவினை நீதிமன்றம் வழங்கியதாக ஒரு தரப்பு பார்க்கப்பட்டது.

    எனினும், இது இந்து மதத்திற்கு எதிரான தீர்ப்பு என்று மற்றொரு தரப்பினர் விமர்சித்தனர். இதனால் இத்தீர்ப்பை கண்டித்து இந்து அமைப்புகள் மற்றும் பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருவதால் கேரள மாநிலமே கொதிப்பில் உள்ளது.

    கனகதுர்கா, பிந்து

    கனகதுர்கா, பிந்து

    இதனால் சபரிமலைக்கு பெண்களால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், அம்மாநில அரசு பெண்கள் கோயிலுக்குள் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தது. அதன்படி கடந்த ஜனவரி 2-ம் தேதி கேரளாவை சேர்ந்த கனகதுர்கா, பிந்து என்ற 2 பெண்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டது.

    ரேஷ்மா, ஷானிலா

    ரேஷ்மா, ஷானிலா

    ரீமா நிஷாந்த், மற்றும் ஷானிலா ராஜேஷ் என்ற இரண்டு பெண்கள் மற்றும் 6 ஆண்கள் இன்று அதிகாலை சபரிமலைக்கு ஐயப்பனை தரிசனம் செய்ய வந்தனர். இவர்கள் இருவருமே கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இரு பெண்களும் ஆண்களின் சட்டையை அணிந்திருந்தனர்.

    நீலமலை

    நீலமலை

    நீலிமலையில் உள்ள தண்ணீர் தொட்டிபகுதியை இவர்கள் கடக்கும் போது அங்கிருந்த பக்தர்கள் இந்த பெண்களை பார்த்துவிட்டனர். அதாவது பம்பைக்கு முன்பு ஒரு கிலோ மீட்டர் தொலைவிலேயே இந்த பெண்கள் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேற்கொண்டு கோயிலுக்கு செல்ல முடியாதபடி முழக்கமிடவும் ஆரம்பித்துவிட்டனர்.

    பதட்ட சூழல்

    பதட்ட சூழல்

    இந்த தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெண்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, இருவருமேம 103 நாட்களாக விரதம் இருந்து இருமுடி கட்டி வந்துள்ளதாக தெரிவித்தனர். இதை கேட்டும்கூட மற்ற பக்தர்கள் பெண்களை தரிசனத்துக்கு அனுமதிக்கவில்லை. இதனால் பதட்டமான சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டது.

    கல்லெறிந்தனர்

    கல்லெறிந்தனர்

    உடனே போலீசாரும் மேற்கொண்டு எந்தவித வன்முறையும் வெடித்து விடக்கூடாது என்பதால், இரு பெண் பக்தர்கள் மற்றும் அவர்களுடன் வந்த 6 ஆண்களையும் போலீசார் பாதுகாப்புடன் பம்பைக்கு திரும்பி அழைத்து வந்தனர். ஆனாலும் அவர்கள் சென்ற வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கல்லெறிந்தனர். தற்போதும்கூட சபரிமலையில் ஒரு பதட்டமான சூழலே நிலவி வருகிறது.

    English summary
    2 women Reshma,Shanila try to enter into the sabarimala and again tension today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X