For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பயங்கரவாதிகள் ஊடுருவல்: 'வாழும் கலை' ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் கலாச்சார விழாவுக்கு உச்சகட்ட பாதுகாப்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உலக கலாச்சார விழா என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை யமுனா நதிக்கரையில் நடத்த உள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு பயங்கரவாதிகள் அச்சுருத்தல் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து கூடுதல் பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி போலீசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உலக கலாச்சார விழா என்ற பெயரில் மார்ச் 11-ம் தேதி முதல் மூன்று நாட்கள் நிகழ்ச்சி ஒன்றை யமுனா நதிக்கரையில் நடத்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிஉட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

Terror advisory: Delhi police told to be on high alert

மேலும் பொதுமக்கள் சுமார் 35 லட்சம் பேர் கலந்து கொள்ள இருப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியுள்ள தீவிரவாதிகளால் நிகழ்ச்சிக்கு அச்சுருத்தல் இருக்கலாம் என்ற தகவல் பரவியது. ஆனால் உள்துறை அமைச்சகம் இதனை மறுத்துள்ளது.

தீவிரவாதிகள் டெல்லிக்குள் ஊடுருவியுள்ளதாக இதுவரை எந்த தகவலும் இல்லை எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நடத்தும் உலக கலாச்சார விழாவிற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.இந்த விழா ஏற்பாட்டிற்கு சுற்றுச்சூழல் விதிகள் கடைபிடிக்கப்படுகின்றனவா என பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.

English summary
The union home ministry has advised the Delhi police to be on high alert at the event organised by Sri Sri Ravishankar. With intelligence from Pakistan suggesting that ten terrorists had entered the country, the threat perception has been graded higher.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X