For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கென்ய பல்கலைக்கழக தாக்குதல்- பிரதமர் மோடி, பான் கி மூன் கண்டனம்

Google Oneindia Tamil News

டெல்லி: கென்யாவி்ல் கரிஸ்ஸா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா பொதுச்செயலாளர் பான் கி மூன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் மிகவும் கொடூரமானது என சாடியிருக்கிறார். தாக்குதல் வன்மையாக கண்டித்தக்கது என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Terror attack in Kenya University campus 'horrific', says Narendra Modi

கென்ய பல்கலைக்கழக தாக்குதலை ஐ.நா.சபையில் பொதுச்செயலாளர் பான் கி மூனும் வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.

தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என பான் கி மூன் வலியுறுத்தியுள்ளதாக ஐநா செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் தெரிவித்தார்.

கென்யாவில் கரிஸ்ஸா பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 147 மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Prime Minister Narendra Modi on Thursday described the terror attack in a Kenya university as "horrific and utterly condemnable."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X