For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீவிரவாதம் மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக உள்ளது.. மோடி வேதனை

தீவிரவாதம் மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக உள்ளது என்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசிய மோடி தீவிரவாதம் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறியதுடன் மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் கூறினார்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலியில் மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசி வருகிறார். அதன் படி இன்றைய தினம் அவர் தீவிரவாதம் குறித்து பேசியிருந்தார்.

Terrorism is a threat to us, says Narendra Modi

அவரது உரையில் முக்கியமானவை இவை தான்...

  • நமது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்காக அதை உருவாக்கியவர்களின் உழைப்பு பெருமையடைய வைக்கிறது.
  • அரசியலமைப்பு சட்டத்தை வரைவுப்படுத்தியபோது சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களின் நலன்களை உறுதி செய்தார் அம்பேத்கர். நாட்டுக்கு அவர் ஆற்றிய பங்கு வளமானது, விலைமதிப்பில்லாதது.
  • கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலை இந்தியா அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இந்த தாக்குதலில் உயிரிழந்த மக்கள், காவலர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு இந்த நாடு வீரவணக்கம் செலுத்துகிறது. அவர்களின் தியாகங்களை இந்த நாடு மறக்காது.
  • மனித குலத்துக்கு தீவிரவாதம் தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கே அச்சுறுத்தலாக உள்ளது. உலக நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை வேரறுக்க காலம் கனிந்து விட்டது.
  • 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் தீவிரவாதம் தலைதூக்கி வருகிறது. தீவிரவாதத்தின் அழிவை ஏற்படுத்தக் கூடிய விஷயங்களை தற்போதுதான் உலக நாடுகள் உணர்கின்றன. நாம் கூறியபோது அவற்றை உலக நாடுகள் தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை.
  • இந்தியா புத்தர், மகாவீரர், குரு நானக், மகாத்மா காந்தி உள்ளிட்டோர் வாழ்ந்த பூமியாகும். இதனால் உலக முழுவதும் அகிம்சையையும் அமைதியையும் மட்டுமே நாம் பரப்புகிறோம்.
  • நமது நாகரீகங்கள் ஆற்றங்கரையில் உருவாகியுள்ளன, சிந்து, கங்கை, யமுனா அல்லது சரஸ்வதி ஆகிய நதிகளும், கடல்களும் நமது நாட்டில் பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் அளிக்கிறது. இவை தான் ஒட்டுமொத்த உலகுக்கே நுழைவுவாயிலாகும்.
  • சத்ரபதி சிவாஜியையும் அவரது கடற்படையின் திறமையையும் யாரால் மறக்க முடியும். அவரது ஆட்சி காலத்தில் கொங்கன் கடற்கரை பகுதிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக இருந்தன. அவருக்கு சொந்தமான கோட்டைகளான சிந்து துர்க், முருத் ஜன்ஜிரா, சுவர்ண துர்க் உள்ளிட்டவை கடற்கரையை சுற்றியிருந்தன.
  • இன்றைய காலகட்டத்தில் உலகில் உள்ள பெரும்பாலான கடற்படைகள் போர் பிரிவுகளில் பெண்களை அனுமதிக்கின்றன. ஆனால் 900 ஆண்டுகளுக்கு முன்பு சோழர் கடற்படையிலும் ஏராளமான பெண்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர் என்பது சிலருக்கு மட்டுமே தெரியும்.
  • யூரியா பயன்படுத்துவதால் மண் வளம் பாதிக்கப்படும். அதன் பயன்பாட்டை குறைக்க விவசாயிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மண்வளத்தை மேம்படுத்த வழங்கப்படும் ஆலோசனைகளை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும். உற்பத்தியை அதிகரிக்க மண் வளத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று மோடி தனது உரையில் கூறினார்.
English summary
Prime Minister Narendra Modi addressed the nation through his monthly radio programme, Mann Ki Baat. He also said that Terrorism is a threat to humanity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X