For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீவிரவாதிகள் ஊடுருவலுக்கு பாக். ராணுவமே காரணம்: அந்தோணி குற்றச்சாட்டு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Terrorists can’t infiltrate without Pakistani Army’s support: Antony
டெல்லி: பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியின்றி தீவிரவாதிகளால் எல்லைப்பகுதியில் ஊடுருவ முடியாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி குற்றம்சாட்டினார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது:

கடந்த சில மாதங்களாகவே எல்லைப் பகுதியில் ஊடுருவல் முயற்சிகள் அதிகரித்துள்ளன. இந்தியா, பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் இருபுறமும் ராணுவத்தினர் காவல் காக்கின்றனர். ஆனால் பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் இருந்து மட்டும் எவ்வாறு தீவிரவாதிகள் ஊடுருவ முடிகிறது?.

ஊடுருவும் தீவிரவாதிகள் நன்கு பயிற்சி பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். எல்லைப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடாது என்று இரு ராணுவத்திற்கும் இடையே 2003ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் 250 முறை பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.

இதனால் எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக மாற்ற பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது.

இவ்வாறு அந்தோணி தெரிவித்தார்.

English summary
Amidst heightened tensions along the International Border and Line of Control, Defence Minister AK Antony on Wednesday assured the nation that India’s armed forces are fully prepared to meet any challenge regarding border security.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X