For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குருதாஸ்பூர் தாக்குதலுக்கு காரணம் பாக். தீவிரவாதிகள் - அடித்துக் கூறும் ராஜ்நாத்சிங்; மறுக்கும் பாகி

Google Oneindia Tamil News

சண்டிகர்: பஞ்சாபில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது கூற்றை மறுத்துள்ளது பாகிஸ்தான்.

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தினா நகரில் கடந்த திங்கட்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள், காவல்துறையினர் என 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மூவரும் அன்றைய தினமே சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Terrorists who attacked Gurdaspur came from Pak Rajnath Singh

இதுதொடர்பாக மாநிலங்களவையில் அறிக்கை தாக்கல் செய்த அவர், ராவி ஆறு வழியாக தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவியதாக கூறினார்.

நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்க முயன்றவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க அரசு எப்போதும் உறுதிபூண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இந்திய வீரர்கள் எந்தவித தாக்குதலையும் எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்கள். இந்திய நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பை யார் குலைக்க முயன்றாலும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். தீவிரவாதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம். எல்லை தாண்டிய தீவிரவாதத்தைத் தடுக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால் குர்தாஸ்பூர் தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் மறுத்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், ''பஞ்சாப்பில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் கடும் கண்டனத்துக்கு உரியது. பாகிஸ்தானும் தீவிரவாத சம்பவங்களால் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், இந்திய ஊடகங்கள் எங்கள் நாட்டின் மீது குற்றம்சாட்டுவது துரதிருஷ்டவசமானது. தீவிரவாதத்தை அனைவரது பொதுவான எதிரியாகவே பார்த்து வருகிறோம். விசாரணை எதுவும் செய்யாமல் பிறர் மீது குற்றம் சுமத்துவது ஆரோக்கியமான போக்கு இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

English summary
The gunmen who stormed a police station and killed seven people in Punjab came from Pakistan, according to preliminary evidence, Home Minister Rajnath Singh says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X