For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தானே மத்திய சிறை இனி அதிரும்ல... கைதிகளே நடத்தும் எஃப்எம் விரைவில் தொடக்கம்

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் தானே மத்திய சிறையில் கைதிகளே நடத்தும் வானொலி பன்பலை வரைவில் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தானே மத்திய சிறைகளில், கைதிகளே நடத்தும் எஃப்எம் அடுத்த 15 நாட்களில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. எஃஎம் தொடங்கிய பின்னர் சிறையில் உள்ள கைதிகளே ரேடியோ ஜாக்கியாக செயல்படுவார்கள் என்றும், எஃப்எம் நிகழ்சியானது சிறைகளுக்குள் மட்டுமல்லாமல் மற்ற நகரப்பகுதிகளிலும் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் தொடக்க விழாவிற்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை அழைக்க திட்டமிட்டுள்ளனர்.

Thane Central Jail inmates to soon start FM radio station

அம்மாநில அமைச்சர் எக்நாத் ஷிண்டே நேற்று தானே சிறைக்கு வருகை தந்தார். அப்போது 'பதஞ்சலி யோகா சமிதி' அமைப்பு சமீபத்தில் நடத்திய யோகா வகுப்பை நிறைவு செய்த 29 கைதிகளுக்கு, அவர் சான்றிதழ் வழங்கினார். மேலும் சிறை வளாகத்தில் உள்ள பழுது வேலைகளை சரி செய்யுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சிறை வளாகத்தில் உடற்பயிற்சி கூடம் ஒன்று தொடங்கப்படலாம் என்றும் ஆலாசனை வழங்கினார். இதனிடையே ஷிண்டேவிடம், சிறை கண்காணிப்பு அதிகாரியான ஹிராலா ஜாதவ் அடுத்த 15 நாட்களில் சிறையிலேயே எஃப்எம் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இதற்கு அரசு தேவையான உதவியைச் செய்யும் என்று அமைச்சர் ஷிண்டேவும் தெரிவித்துள்ளாராம்.

English summary
An FM radio station is likely to start operating soon in Thane Central Prison with inmates doubling up as jockeys, according to a senior official.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X