For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜிஎஸ்டி வரி விதிப்பால் ரெஸ்டாரண்டுகளில் குறைந்த உணவு விலை! வாடிக்கையாளர்கள் குஷி

Google Oneindia Tamil News

டெல்லி: ஜிஎஸ்டி வரி விதிப்பு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு உணவகங்கள் மீதான மறைமுக வரி விதிப்பு என்பது குறைந்து, அதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு, அதிலும் குறிப்பாக, நடுத்தர மக்களுக்கு மிகுந்த பலன் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

குளிர்சாதன வசதி செய்யப்பட்ட மற்றும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட உணவகங்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதம் என்பது, 14.22 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. குவஹாத்தி நகரில் நடைபெற்ற 23வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Thanks to GST, eating out is a lot more cheaper

இன்புட் வரி கிரெடிட் (ITC) சலுகையை உணவகங்கள் எடுத்துக்கொள்ள முடியாது. அதேபோல மதுபான வகைகளுக்கு ஜிஎஸ்டி வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவற்றின் மேல் மாநில அரசு வரிகளை விதித்துக்கொள்ளலாம்.

இன்புட் வரி கிரெடிட் பலனை வாடிக்கையாளர்களுக்கு உணவகங்கள் வழங்காததால், அந்த சலுகையை உணவகங்களுக்கும் வழங்கவில்லை என்று விளக்கமளித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.

ரூ.7500க்கு மேல் வாடகை வசூலிக்க கூடிய நட்சத்திர ஓட்டல்கள் தவிர்த்து, பிற உணவகங்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் உள்ள உணவகங்களுக்கான வரி என்பது 18 சதவீதமாக தொடரும் அவர்களுக்கு உள்ளீடு வரி வசதி உண்டு.

ஜிஎஸ்டி வரி என்பது ஐந்து பிரிவுகளால் வசூலிக்கப்படுகிறது. சில பொருட்களுக்கு வரி கிடையாது. இது தவிர 5%, 12%, 18% மற்றும் 28 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது.

பெட்ரோலிய பொருட்கள், மதுபானங்கள் மின்சாரம் ஆகியவை ஜிஎஸ்டி வரம்புக்குள் வரவில்லை. அவை இதற்கு முன்பு இருந்தபடி மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.

2014ம் ஆண்டு சேவை வரி மற்றும் வாட் வரி ஆகியவை இணைந்து உணவகங்கள் மீது 14.42% அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்த பிறகு இது 5 சதவீதமாக குறைந்துள்ளது. எனவே, இதன் பலன் இறுதியாக வாடிக்கையாளர்களுக்கு சென்று சேருகிறது. இது ஜிஎஸ்டி வரி விதிப்பின் பலனாகும்.

English summary
The Indirect tax on restaurant has been reduced substantially due to the implementation of Goods and Services Tax (GST). Indeed, a boon for end-consumer, especially, middle-class people in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X