For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5 மாநில தேர்தலில் 2 மாநில முதல்வர்களின் தலை உருண்டது!

உத்தரகண்ட், கோவா ஆகிய இரு மாநிலங்களின் முதல்வர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: உத்தரகண்ட், கோவா ஆகிய மாநில முதல்வர்களான ஹரீஷ் ராவத், லட்சுமிகாந்த் பர்சேகர் ஆகியோர் படுதோல்வியை சந்தித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. அதில் பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களைத் தவிர்த்து மற்ற 2 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

The 2 Chief Ministers were lost in Assembly Elections 2017

உத்தரகண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் போட்டியிட்ட முதல்வர்கள் தோல்வி அடைந்தனர். உத்தரகண்டடில் ஹரித்வார் (ரூரல்), கிச்சா ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட ஹரீஷ் ராவத் தோல்வி அடைந்தார்.

ஹரித்வார் தொகுதியில் ரதீஷ்வரானன்யிடமும், கிச்சா தொகுதியில் ராஜேஷ் சுக்லாவிடமும் ராவத் படுதோல்வி அடைந்தார்.

அதேபோல், கோவாவில் மண்ட்ரோம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் லட்சுமிகாந்த் பார்சேகர் காங்கிரஸ் வேட்பாளர் தயானந்த் சோப்தேவிடம் தோல்வியை தழுவினார். பாஜகவில் இருந்த சோப்தே முதல்முறையாக காங்கிரஸில் இணைந்து போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Uttarkhand, Goa Chief ministers have been defeated in the assembly election 2017.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X