For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 லட்சம் துப்பாக்கிகளை கீழே போடுகிறது இந்திய ராணுவம்.. ஏன் தெரியுமா?

இந்திய ராணுவத்தில் கடந்த 20 நாள்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ள 2 லட்சம் சிறிய ரக துப்பாக்கிகளுக்கு விடை கொடுக்கப்பட்டு அடுத்த ஆண்டு முதல் நவீன தொழில்நுட்பத்தின் மூலம்

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: ராணுவத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ள, 'இன்சாஸ்' எனப்படும், இந்திய சிறிய ரக துப்பாக்கிகளுக்கு மாற்றாக, புதிய நவீன ரக துப்பாக்கிகளை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 1988ம் ஆண்டு இந்திய சிறிய ரக துப்பாக்கிகள் அமைப்பு முறையின் 2 லட்சம் எண்ணிக்கையிலான துப்பாக்கிகள் உள்நாட்டிலேயே தயார் செய்யப்பட்டு அவை இந்திய ராணுவத்தில் ஈடுபடுத்தப்பட்டன. இந்த ரக துப்பாக்கிகள் இந்திய எல்லைப் பகுதிகளிலும், நக்ஸல் தடுப்பு நடவடிக்கை பகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

The 2 Lakhs Old rifles would get retirement from next year

தற்போது இந்த துப்பாக்கிகளின் பயன்பாடு அடுத்த ஆண்டு முதல் முற்றிலும் நிறுத்தப்பட்டு புதிய ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவுள்ளன. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது

கடந்த 20 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள இந்த சிறிய ரக துப்பாக்கிகளால் நீண்ட தூரம் உள்ள இலக்கை தாக்கும் திறன் இல்லை. அதனால் அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஊடுருவல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ராணுவத்துக்கு அதி நவீன துப்பாக்கிகளை வழங்க பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது.

உலகின் சிறிய ரக துப்பாக்கிகளை தயாரிக்கும் முன்னணி நிறுவனமான ஜெர்மனியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிகளை கொள்முதல் செய்து வருகிறது. ஆனால் புதிய ரக துப்பாக்கிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் வகையில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன. இதில் இந்தியா உள்பட வெளிநாடுகளைச் சேர்ந்த 18 நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கிடைத்தவுடன் தொழில்நுட்ப தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும். மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய துப்பாக்கிகளை தயார் செய்வதற்கான பணிகள் தற்போது தொடக்க நிலையில் உள்ளன. இப்பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்து வரும் 2018-இல் இருந்து, இந்த நவீன ரக துப்பாக்கிகள் பயன்பாட்டு வரும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

English summary
After nearly 20 years, the indigenously-manufactured INSAS rifles will be finally ‘retiring’ from the army and replaced by an imported assault rifle to be manufactured in the country later.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X