For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. சிகிச்சை குறித்த எய்ம்ஸ் அறிக்கை திருப்தி அளிக்கவில்லை: ஆம் ஆத்மி சாடல்

ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை அளித்த அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனை அளித்த சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை திருப்திகரமானதாக இல்லை என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாள்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அங்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு 5 முறை சிகிச்சை அளித்தது. அது வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி தமிழக அரசு நேற்று டெல்லியில் அறிக்கை வெளியிட்டது.

The AIIMS Medical report about Jayalalitha's treatment not satisfactory, says Aam Aadmi Party

இது திருப்தி அளிக்கவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி கருத்து தெரிவித்துள்ளது. கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள். முதலில் மீத்தேன் என்ற பெயரில் வந்த இந்த திட்டத்தை தற்போது பெயர் மாற்றி செயல்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது.

[ஜெ. சிகிச்சை: தமிழக அரசு வெளியிட்ட அப்பல்லோ மருத்துமனை. எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கைகள்]

தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசின் செயலை கண்டிக்கிறோம். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை மிகவும் தாமதமானது. இதில் உள்ள தகவல்கள் திருப்தி அளிக்கவில்லை. எனவே, விரிவாக விசாரணை நடத்தி மக்களின் சந்தேகத்தை தீர்க்க வேண்டும் என்றார் அவர்.

English summary
The AIIMS report which was released yesterday about treatment to Jayalalitha is not satisfactory, the TN govt should conduct probe and it should clear the People's doubt, says Aam Aadmi Party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X