For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த நூற்றாண்டில் வங்காள விரிகுடாவின் கடுமையான புயல் அம்பன் .. கொரோனாவுக்கு மத்தியில் பெரும் சவால்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: இந்த நூற்றாண்டில் வங்காள விரிகுடாவின் கடுமையான புயல் இந்த ஆம்பன் சூப்பர் சூறாவளி புயல். இந்தியாவின் மேற்கு வங்கத்திற்கும் வங்கதேசத்திற்கும் இடையே இன்று கரையை கடக்கிறது. ஒரு பக்கம் கொரோனா மிரட்டும் நிலையில் மறுபக்கம் புயலும் வந்திருப்பதால் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதும் அதிகாரிகளுக்கு மிகுந்த போராட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    Amphan cyclone: வங்க கடலில் உருவான மோசமான புயல் எது தெரியுமா?

    இந்த புயல் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. பேரழிவு தரக்கூடிய மற்றும் ஆபத்தான புயல் வீசும் என்ற கணிப்புகளுடன். இன்று கரையை கடக்க உள்ளதால் உச்சகட்டமாக உஷார் நிலையில் மீட்பு படைகள் செயல்பட்டு வருகின்றன.

    சூப்பர் சூறாவளி ஆம்பனின் பாதையில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். வடகிழக்கு இந்தியப் பெருங்கடலில் உருவாகும் இரண்டாவது "சூப்பர் சூறாவளி" இந்த ஆம்பன் புயல் ஆகும்.

    ஒரு பக்கம் அர்ச்சகர்கள்.. இன்னொரு பக்கம் இஸ்லாமியர்கள்.. தேடி தேடி உதவிய திமுகவின் அன்பில் மகேஷ்!ஒரு பக்கம் அர்ச்சகர்கள்.. இன்னொரு பக்கம் இஸ்லாமியர்கள்.. தேடி தேடி உதவிய திமுகவின் அன்பில் மகேஷ்!

    முயற்சிகள் தடைபட்டுள்ளன

    முயற்சிகள் தடைபட்டுள்ளன

    ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவாமல் தடுக்க கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் அவசியம் உள்ள நிலையில் புயலால் முயற்சிகள் தடைபட்டுள்ளன, இரு நாடுகளிலும் தொற்று எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகிறது. நாடு தழுவிய லாக்டவுன் அவர்களின் வாழ்வாதாரங்களை காலி செய்த நிலையில் பல ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரிய நகரங்களிலிருந்து வீடு திரும்ப முயற்சிக்கும் சாலைகளில் சென்று வருகிறார்கள்.

    இந்திய வானிலை

    இந்திய வானிலை

    இது ஒருபுறம் எனில் மேற்கு வங்க மாநிலத்தில் கரையை கடக்க உள்ள பகுதிகள் ஆம்பன் புயல் எப்படி பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து இந்திய வானிலை மையம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவின் வானிலை அலுவலகத் தலைவர் மிருதுஞ்சய் மொஹாபத்ரா இதுபற்றி கூறுகையில், மணிக்கு 240 கிமீ / மணி (150 மைல்) வேகத்தில் காற்று வீசுகிறது இது ஒரு வகை-நான்கு சூறாவளிக்கு சமமானதாகும். மேற்கு வங்கம் மற்றும் அண்டை நாடான வங்கதேசத்தின் கடலோரங்களைக் கடப்பதற்கு முன்பு இது சற்று வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அது "பெரிய அளவிலான மற்றும் விரிவான சேதத்தை ஏற்படுத்தும்" அளவுக்கு வலுவாக இருக்கக்கூடும் என்று தெரிவித்தார்.

    16 அடி அலைகள் எழும்

    16 அடி அலைகள் எழும்

    வங்ககடலில் 10 அடி முதல் 16 அடி (3-5 மீ) அலைகள் எழும் என்றும் இது இரண்டு மாடி வீட்டைப் போல உயரமாக இருக்கும் என்றும் இந்தியா வானிலை மையம் கணித்துள்ளது. ஆம்பன் சூறாவளி நெருங்கிய நிலையில் பல லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயற வைத்துள்ளது இந்தியா. அதிகப்படியான ஆற்று வெள்ளம் பெரும்பாலும் கடுமையான சூறாவளிகளின் போது பெரும் உயிர் இழப்புக்கு காரணமாகின்றன. 3 கோடி மக்கள் வசிக்கும் வங்கதேசத்தின் தாழ்வான கடற்கரை மற்றும் இந்தியாவின் கிழக்கு கடற்கரை ஆகியவை சமீபத்திய ஆண்டுகளில் நூறாயிரக்கணக்கான மக்களின் உயிரை சூறாவளிகள் கொன்றுள்ளன. அவை சூறாவளியால் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன.

    ஆம்பன் சக்தி வாய்ந்த புயல்

    ஆம்பன் சக்தி வாய்ந்த புயல்

    1999 ஆம் ஆண்டில், ஒடிசாவில் ஒரு சூப்பர் சூறாவளி தாக்கி கிட்டத்தட்ட 10,000 பேர் கொல்லப்பட்டனர். எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், வங்கதேசத்தில் ஒரு சூறாவளி, மற்றும் வெள்ளம் 139,000 பேரைக் கொன்றது. 2007 ஆம் ஆண்டில் சிதர் சூறாவளி வங்கதேச நாட்டை பேரழிவிற்கு உள்ளாக்கியதில் சுமார் 3,500 பேர் உயிரிழந்தனர். மற்றும் பில்லியன் கணக்கான டாலர்களை சேதப்படுத்தியதில் இருந்து ஆம்பன் மிக சக்திவாய்ந்த புயலாக இருக்கும் என்று வங்க தேச நாட்டு அதிகாரிகள் அஞ்சுகின்றனர். இரு நாடுகளிலும் உள்ள அதிகாரிகள் கூட்டத்தை குறைக்க கூடுதல் தங்குமிடம் பயன்படுத்துவதாகவும், அதே சமயம் முககவசத்தை கட்டாயமாக்கி கூடுதல் சோப் மற்றும் சானிடைசர் வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

    English summary
    The Bay of Bengal’s fiercest storm this century – super cyclone Amphan . evacuations in India and Bangladesh slowed by virus
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X