For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தரமான வாழ்க்கை… இந்தியாவிற்கு 7 வது இடம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: தரமான வாழ்க்கை நடத்துவதில் இந்தியா 7வது இடம் பிடித்துள்ளது. என ஹச்.எஸ்.பி.சி.,எக்ஸ்பாட் என்னும் தனி ஆன்லைன் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் 37 நாடுகள் கணக்கெடுக்கப்பட்டன. ஆசியாவில் ஒரு சமூக வெப்பகுதி பெருகி வருகிறது. வாழ்க்தை தரத்தை உயர்த்த இலக்காக கொண்டு முன்னணி வகிக்க தன்னை தயார் செய்து வருகின்றன ஆசிய நாடுகள் என ஹச்.எஸ்.பி.சி., தலைவர் டீன் பிளாக்பர்ன் தெரிவித்துள்ளார்

தாய்லாந்து நம்பர் 1

தாய்லாந்து நம்பர் 1

இந்த பட்டியலில் ஆசிய நாடுகள் முக்கிய இடம் பெற்றுள்ளன. தாய்லாந்து முதலிடத்திலும் பஹ்ரைன் 2 வது இடத்திலும் , சீனா 3வது இடத்திலும் கேமன் தீவுகள் 4 வது இடத்திலும் , ஆஸ்திரேலியா5 வது இடத்திலும் உள்ளன.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் 6வது இடத்திலும் மற்றும் தைவான் 8 வது இடத்திலும் ஸ்பெயின் 9வது இடத்திலும் மற்றும் பிரேசில் 10வது இடத்திலும் உள்ளதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்தியா 7வது

இந்தியா 7வது

இந்த பட்டியலில் இந்தியா 7 வது இடத்தைப் பெற்றுள்ளது.

இத்துடன் மற்ற நாடுகளோடு ஒப்பிட்டு பார்க்கும்போது இந்தியாவில் மக்கள்,சமூக வாழ்க்கையை நன்கு உணர்ந்து அனுபவித்து வருகின்றனர். இது மற்ற நாடுகளில் குறைவு.வெப்ப மற்றும் உணவு மற்றும் கலாச்சாரம் இம்மூன்றும் நாடுகளுக்கிடையே முக்கிய பங்கு வகிக்கிறது.

குழந்தைகள் கல்வி,வளர்ப்பு

குழந்தைகள் கல்வி,வளர்ப்பு

குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற நான்கு ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி முதலிடத்தையும் , பிரான்ஸ் மூன்றாவது இடத்தையும் , பெல்ஜியம் 6வது இடத்தையும் மற்றும் ஸ்பெயின் 9வது இடத்தையும் பெறுகிறது எச்எஸ்பிசி ஆன்லைன் ஆய்வு தெரிவிக்கிறது.

சம்பாதிக்கும் திறன்

சம்பாதிக்கும் திறன்

பொருளாதார கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, சம்பாதிக்கும் திறன் , செலவு, வருமானம் மற்றும் திருப்தி போன்ற காரணிகளை அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது இந்த பட்டியலில் முதலிடத்தில் சுவிச்சர்லாந்து , 2வது இடத்தில் சீனா மற்றும் 3வது இடத்தில் கத்தார் இடம் பெறுகிறது.

English summary
A new study by HSBC ranks several Asian nations among the best countries for expatriates in 2013. The annual Expat Explorer Survey analyzes the findings from 7,000 expats to rank their new homes according to criteria including economics, experience, and raising children.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X