For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லாவலின் ஊழல் வழக்கில் பினராயி விஜயன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ திடீர் அப்பீல்

லாவலின் ஊழல் வழக்கில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் விடுவிப்பை எதிர்த்து சிபிஐ அப்பீல் செய்துள்ளது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம் : கேரள முதல்வர் பினராயி விஜயனை லாவலின் ஊழல் வழக்கில் இருந்து விடுவித்ததை எதிர்த்து சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது.

1998ம் ஆண்டு அமைச்சரவையில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த பினராயி விஜயன், கேரளாவின் மூன்று முக்கிய நீர் மின்நிலையங்களில் உள்ள இயந்திரங்களை பராமரிக்க கனடாவைச் சேர்ந்த எஸ்.என்.சி - லாவலின் நிறுவனத்திற்கு 372 கோடி ரூபாய்க்கு அனுமதி அளித்தார் என்றும், அதில் முறையான டெண்டர் விபரங்கள் பின்பற்றப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

The CBI is Ready to Challenge Kerala CM Acquittal in the SNC- Lavalin Case

இந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் பினராயி விஜயன் மீது குற்றம் இல்லை என்று சொல்லி 2013ல் விடுதலை செய்தது. தற்போது அந்த வழக்கில் விஜயனின் விடுதலையை எதிர்த்து தற்போது சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இதுகுறித்து இடதுசாரி தொண்டர்கள் கூறும்போது, சி.பி.ஐ எனும் அமைப்பை தனது கைப்பாவையாகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதுவே, இந்த மேல்முறையீட்டிற்கு காரணம் என்று தெரிவித்தனர்.

English summary
The CBI is ready to move the Supreme Court to challenge his acquittal in a corruption case dating back to the 90s.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X