For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்திராயன் -2 விண்ணில் பாய்வது நேரலை... காணத் தவறாதீர்

Google Oneindia Tamil News

Recommended Video

    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவுவது தற்காலிக நிறுத்தம்

    ஸ்ரீஹரிகோட்டா: சந்திராயன் - 2 விண்ணில் பாய்வது நேரடியாக ஒளிப்பரப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

    ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து சந்திராயன் -2 திங்கள்கிழமை அதிகாலை 2:51 மணிக்கு ஏவப்பட உள்ளது. இதனை பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் நேரடியாக ஒளிபரப்புகிறது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ).

    மேலும், டி.டி. நேஷனல் சேனல் (தூர்தர்ஷன்), யூடியூப் மற்றும் அதிகாரப்பூர்வ இஸ்ரோ இணையதளத்தில் சந்திராயன் -2 விண்ணில் பாயும் நேரடி ஸ்ட்ரீமிங்கையும் நீங்கள் பார்க்கலாம்.

    நேரடி ஒளிபரப்பு

    நேரடி ஒளிபரப்பு

    பேஸ்புக், ட்விட்டர், தூர்தர்ஷன், யூடியூப் மற்றும் இஸ்ரோ இணையதளத்தில் சந்திராயன் -2 அறிமுகத்தின் நேரடி ஒளிபரப்பு அதிகாலை 2:30 மணிக்கு தொடங்கும். GSLV MkIII-M1 / Chandrayaan-2 ஏவுதலின் நேரம் அதிகாலை 2:51 மணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    எப்படி பார்ப்பது

    எப்படி பார்ப்பது

    முகநூலில், இஸ்ரோ - இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தைத் தேடி, அதைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர், நீங்கள் விண்வெளி மையத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் லைவ்வாக பார்க்கலாம். ட்விட்டரில் சந்திராயன் -2 வின் நேரடி ஸ்ட்ரீமிங்கைப் பார்க்க, நீங்கள் இஸ்ரோவின் (@isro) அதிகாரப்பூர்வ பக்கத்திற்குச் சென்று, நேரடி ஸ்ட்ரீமிங் இணைப்பைத் தேடி, அதில் கிளிக் செய்யலாம்.

    இஸ்ரோ இணைதளம்

    இஸ்ரோ இணைதளம்

    இதே போல், இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சந்திராயன்-2 இன் நேரடி காட்சிகளை காண, www.isro.gov.in க்குச் சென்று, "ஜி.எஸ்.எல்.வி எம்.கே.ஐ.ஐ-எம் 1 / சந்திராயன் 2 ஏவப்படுவதை அதிகாலை 02: 30 மணி முதல் பார்க்கலாம்.

    டி.டி. நேஷனல்

    டி.டி. நேஷனல்

    டி.டி. நேஷனல் அல்லது தூர்தர்ஷன் சேனலும் சந்திராயன் -2 அறிமுகத்தின் நேரடி ஒளிபரப்பை ஒளிபரப்பவுள்ளது. தூர்தர்ஷனுக்கு யூடியூப் சேனலும் உள்ளது. youtube.com க்குச் சென்று இஸ்ரோ நேரலை என டைப் செய்தால், சந்திராயன் -2 ஏவுதலின் நேரடி ஸ்ட்ரீமிங்கைப் பார்க்க உங்களுக்கு நிறைய ஆப்ஷன்கள் இருக்கும்.

    இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேட்டி

    இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேட்டி

    சந்திராயன் -2 விண்கலத்தை ஏந்திய 'பாகுபலி' என்ற புனைப்பெயர் கொண்ட இந்தியாவின் கனரக ராக்கெட்டை ஜூலை 15 அதிகாலை லிப்ட்-ஆஃப் செய்வதற்கான கவுண்டன் ஞாயிற்றுக்கிழமை காலை 6.51 மணிக்கு தொடங்கியது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.

    எர்த் பார்க்கிங்

    எர்த் பார்க்கிங்

    ஜி.எஸ்.எல்.வி-எம்.கே. III ராக்கெட் ரூ .960 கோடி மதிப்பிலான, சந்திராயன் -2 ஐ 170x40400 கி.மீ சுற்றுப்பாதையில் எர்த் பார்க்கிங் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து, லேண்டர்-விக்ரம் மற்றும் ரோவர்-பிரக்யான் ஆகியவற்றைக் கொண்டு செல்லும் சந்திராயன் -2 விண்கலம் சந்திரனுக்கு மேலும் பயணிக்கும். பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் சுமார் 3.844 லட்சம் கி.மீ. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Don't miss out: The Chandrayaan-2 spacecraft broadcast live on Facebook, Twitter and youtube
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X