For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரத் ஜடோ யாத்திரை நிறைவு விழா பொதுக் கூட்டம்.. எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு! ஹை அலர்ட்டில் காஷ்மீர்

யாத்திரை தொடங்கும் போது பாஜக ஆதரவாளர்கள் ராகுல் காந்தி அணிந்திருந்த டீ-சர்ட் குறித்து 'ட்ரோல்' செய்தனர். ஆனால் அதே டீ-சர்ட் ராகுலின் அடையாளமாக மாறியது.

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: கடந்த செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியிலிருந்து தொடங்கிய பாரத் ஜடோ யாத்திரை எனும் ஒற்றுமை நடைப்பயணம் இன்று ஜம்மு காஷ்மீரில் முடிவடைகிறது. ஸ்ரீநகரில் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 23 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராகவும், எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியை வலுப்படுத்தவும் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் 'பாரத் ஜடோ யாத்திரையை' தொடங்கினார். கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களில் தோல்வி, கட்சிக்கு புதிய தலைமை வேண்டும் என்று அதன் மூத்த தலைவர்களே கடிதம் எழுதியது, ஒவ்வொரு தலைவர்களாக பாஜகவுக்கு தாவியது, பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை இழந்தது போன்றவை காங்கிரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்த நெருடிக்கடியிலிருந்து கட்சியை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டார். எனவேதான் இந்த நடைப்பயணத்தை அவர் தொடங்கினார். கன்னியாகுமரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வைத்து யாத்திரையை தொடங்கிய நிலையல், இந்த யாத்திரையானது கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா என ராஜஸ்தானில் வந்து தனது 100வது நாளை நிறைவு செய்தது.

‛ஜெயிட்டோம் மாறா’.. காஷ்மீரில் முடிந்த பாரத் ஜோடோ யாத்திரை..ராகுல் போட்ட நெகிழ்ச்சி பதிவு! என்ன? ‛ஜெயிட்டோம் மாறா’.. காஷ்மீரில் முடிந்த பாரத் ஜோடோ யாத்திரை..ராகுல் போட்ட நெகிழ்ச்சி பதிவு! என்ன?

குளிர்

குளிர்

அதன் பின்னர் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் யாத்திரை டெல்லியில் நுழைந்தது. யாத்திரையின் தொடக்கத்தில் ராகுல் காந்தி அணிந்திருந்த டீ-சர்ட் காஸ்ட்லியானது என பாஜக ஆதரவாளர்கள் ராகுலை ட்ரோல் செய்ய தொடங்கினர். ஆனால் டெல்லியில் கடும் குளிரிலும் ராகுல் காந்தி வெறும் டீ-சர்ட்டுடன் பயணித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மறுபுறம் பாதுகாப்பு சார்ந்த பிரச்னைகள் மேலெழுந்தன. இந்த யாத்திரையை வரவேற்க ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்ததில், ராகுல் காந்தியின் பாதுகாப்பு வளையத்தை தாண்டி சிலர் உள்நுழைந்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இதனையடுத்து கட்சி தொண்டர்களே ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அளித்ததாகவும், இது மிகப்பெரும் பாதுகாப்பு குறைப்பாடு என்றும் கட்சி குற்றம்சாட்டி உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியது. ஆனால், நாங்கள் சரியாகதான் பாதுகாப்பு கொடுத்தோம் என்றும், ராகுல் காந்திதான் பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபட்டுள்ளார் என்றும் ராகுலுக்கு பாதுகாப்பு அளித்திருந்த துணை ராணுவப்படை விளக்கம் கொடுத்தது. இந்த சர்ச்சை ஒருபுறும் இருந்தாலும் ராகுல் காந்தி எங்கும் யாத்திரையை நிறுத்தவில்லை. டெல்லியை அடுத்து உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் என யாத்திரை காஷ்மீரை வந்தடைந்தது. ராகுல் காந்தில் தான் அணிந்திருந்த டீ-சர்ட்டுக்கு மேலே முதல் முறையாக ஜெர்க்கின் ஒன்றை அணியத் தொடங்கினார்.

காஷ்மீர்

காஷ்மீர்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்டதிலிருந்து அம்மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எனவே ராகுலுக்கும் அவருடன் யாத்திரையில் பங்கேற்பவர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ராகுலுடன் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள், ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முக்தி ஆகியோர் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று (ஜன.29) இந்த யாத்திரை 3,500 கி.மீ பயணத்தை ஜம்முவில் நிறைவு செய்தது. இதனையடுத்து இன்று நிறைவு விழா பொதுக்கூட்டம் ஸ்ரீநகரில் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட 23 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டம்

பொதுக்கூட்டம்

தமிழ்நாட்டிலிருந்து திமுக, விசிக, மநீம உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார்கள். இதன் காரணமாக பொதுக்கூட்டம் நடைபெறும இடத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழகத்தைவிட அதிகமாக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றி முள்வேளிகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுவதற்கு முன்னர் அவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து யாத்திரையை நிறைவு செய்கிறார்

English summary
The Bharat Jado Yatra, which started from Kanyakumari last September, is ending in Jammu and Kashmir today. 23 opposition parties have been invited to participate in today's public meeting in Srinagar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X