For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்தரத்தில் பறந்த ரயில் பெட்டி: தப்பிய பயணியின் அதிர்ச்சித் தகவல்

உத்தரப்பிரதேசம் அருகே விபத்துக்குள்ளான ரயில் பெட்டி அந்தரத்தில் பறந்ததாக தப்பிய பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

கான்பூர்:உத்தரப்பிரதேசம் அருகே விபத்துக்குள்ளான ரயில் பெட்டி அந்தரத்தில் பறந்ததாக அதிலிருந்து தப்பிய பயணி ஒருவர் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

உத்தப்பிரப்பிரதேச மாநிலம் பொக்ரையான் என்ற இடத்தில் பாட்னா -இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் அதிர்வே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

'The coach was in the Air' Says kanpur Train accident suvivor

இந்நிலையில் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய தீப்பிகா திருப்பதி என்ற பயணி விபத்து குறித்து தெரிவித்துள்ளார். அதிகாலையில் பயங்கர சத்தம் கேட்டு எழுந்து விழித்து பார்த்தப்போது தாங்கள் பயணம் செய்த ரயில் பெட்டி அந்தரத்தில் பறப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தீப்பிகா தங்களது உறவினர்கள் 45 பேருடன் ரயிலில் பயணம் செய்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதுவரை தங்கள் உறவினர்கள் 5 பேரை மட்டுமே கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளார்.

மற்றொரு பயணியான பிந்த் குமார் என்பவ, தனது நண்பர்களுடன் ரயிலில் பயணம் செய்துள்ளார். அவர்கள் அனைவரும் வெவ்வேறு பெட்டிகளில் பயணம் செய்துள்ளனர். அந்த பெட்டிகள் பெரும் சேதமடைந்ததில் பிந்த் குமாரின் நண்பர்கள் படுகாயமடைந்துள்ளனர். பிந்த்குமார் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பியுள்ளார்.

உருக்குலைந்த பெட்டிகளை வெட்டி எடுத்து சிக்கியுள்ளவர்களை மீட்புக் குழுவினர் மீட்டு வருகின்றனர்.

English summary
in the train accident over 100 people died and nearly 200 injured. the coach of the train was in the air with a bang when the accident occurred.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X