For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாவூத்தின் 9 முகவரிகளில் 4 மட்டுமே "கன்பர்ம்ட்".. மற்ற ஐந்தும் தவறு?

Google Oneindia Tamil News

டெல்லி: தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் வசிப்பதாக இந்தியாவால் கூறப்பட்டுள்ள 9 முகவரிகளில் 4 முகவரிகள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற ஐந்து முகவரிகளில் தாவூத் இருந்தாரா, இருக்கிறாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லையாம்.

தாவூத் இப்ராகிம் தங்கியுள்ளது பாகிஸ்தான் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனாலும் அதை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு மறுத்தே வருகிறது. இந்த நிலையில் அடுத்த அதிரடியாக தாவூத் இப்ராகிமின் முகவரிகள் என 9 முகவரிகளைக் குறிப்பிட்டு அவனது பாஸ்போர்ட் உள்ளிட்ட விவரத்தையும், அவனது மனைவி பெயரில் உள்ள தொலைபேசி கட்டண பில் விவரத்தையும் இணைத்து ஒரு பட்டியலை இந்தியா பாகிஸ்தானிடம் கொடுத்துள்ளது.

ஆனால் இந்த 9 முகவரிகளில் 4 மட்டுமே உறுதி செய்யப்பட்டதாகும். மற்ற ஐந்தும் இன்னும் உறுதி செய்யப்படவில்லையாம்.

"குமாரசாமி லெவல்" தவறுகள்

இந்தியா வழங்கியுள்ள இந்தப் பட்டியலில் இரண்டு பெரிய தவறுகள் பளிச்செனத் தெரிகின்றன. இது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முதல் தவறு என்னவென்றால், இஸ்லாமாபாத்தில் தாவூத் வசிப்பதாக கூறப்படும் ஒரு முகவரி. இது மூத்த தூதர் டாக்டர் மலீஹா லோதி வசிக்கும் வீடாகும்.

ஐ.நா. தூதர்

ஐ.நா. தூதர்

பாகிஸ்தானுக்கான ஐ.நா. நிரந்தரத் தூதர் லோதியின் வீட்டை தாவூத் வசிக்கும் இருப்பிடமாக இந்தியா குறிப்பிட்டுள்ளது. இது தவறு என்று கூறப்படுகிறது. லோதி, இஸ்லாமாபாத்தில், எண் 7 மெயின் மர்கல்லா சாலை, எப் 6-2 என்ற முகவரியில் வசிக்கிறார்.

2வது தவறு

2வது தவறு

அடுத்த தவறு இன்னொரு முகவரி. அதாவது தாவூத் இருப்பிடமாக கூறப்பட்டுள்ள எண் 29, 22வது தெரு, பி 6-2, மர்கல்லா சாலை முகவரி. இது தி நேஷன் என்ற ஆங்கிலப் பத்திரிகையின் அலுவலகமாகும். அதேசமயம், இப்படி ஒரு முகவரியே இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.

கராச்சி முகவரி சரி

கராச்சி முகவரி சரி

அதேசமயம், கராச்சியில் குறிப்பிடப்பட்டுள்ள கிளிப்டன் சாலை முகவரி சரியானது. இதுதான் கடந்த 10 வருடமாக தாவூத் வசித்து வரும் வீடாக கருதப்படுகிறது. இதை பலரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த முகவரியிலிருந்து அவர் மாறவில்லை என்றும் கூறப்படுகிறது.

5 முகவரிகளில் குழப்பம்

5 முகவரிகளில் குழப்பம்

இந்தியா வழங்கியுள்ள 9 முகவரிகளில் இதுபோல 5 முகவரிகளில் குழப்பம் உள்ளது. இவை சரியாக பரிசோதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தத் தகவல்களை உறுதி செய்ய வேண்டியது பாகிஸ்தான்தான். ஆனால் அது செய்யுமா என்பது மிகப் பெரிய சந்தேகமாகும்.

அதிகாரப்பூர்வமானது அல்ல

அதிகாரப்பூர்வமானது அல்ல

இந்த விவகாரம் குறித்து விளக்கம் தெரிவித்த மத்திய அரசு அதிகாரி ஒருவர், தற்போது மீடியாக்களிடம் உள்ள பட்டியல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்று விளக்கியுள்ளார்.

லோதி வீட்டில் தாவூத் தங்கியிருக்கலாம்

லோதி வீட்டில் தாவூத் தங்கியிருக்கலாம்

மேலும் அவர் கூறுகையில், மிகவும் சிரமப்பட்டு சேகரித்த தகவல்களின் அடிப்படையில்தான் இந்த முகவரிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. டாக்டர் லோதியின் முகவரி என்று கூறப்படும் இடத்தில் தாவூத் நிரந்தரமாக தங்கியிருக்காவிட்டாலும் கூட தற்காலிகமாக தங்கியிருக்கலாம். மறைவிடம் போல அதைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கூறினார் அவர்.

கராச்சி டூ இஸ்லாமாபாத்

கராச்சி டூ இஸ்லாமாபாத்

மேலும் தாவூத் கராச்சியிலேயே நிரந்தரமாக தங்கியிருக்கவில்லை. மாறாக அவ்வப்போது அவன் இஸ்லாமாபாத் போய் வருகிறான். மறைந்து மறைந்து வாழ்கிறான். அடிக்கடி முகவரிகளை மாற்றுகிறான். முக்கியப் பதவிகளில் இருப்போரின் வீடுகளில் தற்காலிகமாக தப்பி வெளியுலகை ஏமாற்றி வருகிறான் என்றார் அவர்.

ஒரு இடத்தில் இருப்பதில்லை

ஒரு இடத்தில் இருப்பதில்லை

தாவூத் எப்போதுமே ஒரே இடத்தில் இருப்பதில்லை. தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறான். தனது இருப்பிடத்தை இந்தியா தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக இதுபோல செய்கிறான் என்றும் அவர் கூறுகிறார்.

English summary
The Indian dossier on Dawood Ibrahim termed Agenda Point 2 lists nine addresses. Are all the nine addresses correct? The fact of the matter is that out of the nine addresses listed in the dossier, only have been verified while there are doubts raised over the other five.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X