For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 மாதங்களுக்கு பிறகு.. ஃபரூக் மற்றும் ஒமர் அப்துல்லாவை சந்திக்கும் கட்சியினர்.. இன்று ஆலோசனை!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லாவை இன்று தேசிய மாநாட்டு கட்சி உறுப்பினர்கள் சென்று சந்திக்க உள்ளனர்.

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லாவை இன்று தேசிய மாநாட்டு கட்சி உறுப்பினர்கள் சென்று சந்திக்க உள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டு இதோடு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் அங்கு இயல்பு நிலை திரும்பியபாடில்லை. இன்னும் காஷ்மீரில் கடைகள் திறக்கப்படவில்லை.

மக்கள் சுதந்திரமாக வெளியே நடமாட முடியவில்லை. அதேபோல் அங்கு இன்னும் முக்கிய தலைவர்கள் பலர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அப்படி செஞ்சுடாதீங்க.. அது இந்தியாவுக்கு சாதகம் ஆகிடும்.. இம்ரான்கான் எச்சரிக்கைஅப்படி செஞ்சுடாதீங்க.. அது இந்தியாவுக்கு சாதகம் ஆகிடும்.. இம்ரான்கான் எச்சரிக்கை

எப்படி இருக்கிறார்கள்

எப்படி இருக்கிறார்கள்

காஷ்மீரில் இன்னும் அம்மாநில முன்னாள் முதல்வர்களான ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோர் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை பார்க்க வேண்டும் என்று அவர்களின் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் அம்மாநில கவர்னர் சத்யபால் மாலிக் இத்தனை நாட்கள் இதற்கு அனுமதி அளிக்காமல் இருந்தார்.

என்ன கோரிக்கை

என்ன கோரிக்கை

காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா அவரின் வீட்டில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அதேபோல் காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவருமான ஒமர் அப்துல்லா அரசு விருந்தினர் மாளிகையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்.

ஏற்பு

ஏற்பு

இவர்கள் சந்திக்க தேசிய மாநாட்டு கட்சியினர் கோரிக்கை வைத்து வந்தனர்.இந்த நிலையில் தற்போது அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு இருக்கிறது.இதனால் தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவர்கள் இன்று பரூக் மற்றும் ஒமர் அப்துல்லாவை சந்திக்க உள்ளனர். தேசிய மாநாட்டு கட்சியின் மாநில தலைவர் தேவேந்தர் சிங் ராணாவின் தலைமையில் இந்த சந்திப்பு நடக்க உள்ளது.

யார் குழு

யார் குழு

தேசிய மாநாட்டு கட்சியின் முன்னாள் எம்எல்ஏக்கள் குழு பரூக் மற்றும் ஒமர் அப்துல்லாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். 2 மாதங்களில் கழித்து காஷ்மீரில் முதல்முறையாக கட்சி ரீதியாக இவ்வளவு பெரிய ஆலோசனை நடக்க உள்ளது. இந்த மாநாடு என்ன மாதிரியான திருப்பத்தை ஏற்படுத்தும். காஷ்மீரில் என்ன மாதிரியான அரசியல் மாற்றங்களை ஏற்ப்டுத்தும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்!

English summary
The delegation of National Conference leaders will meet Farooq and Omar Abdullahs today after two months.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X