For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போயஸ் தோட்டத்திலிருந்து போன 'பண மூட்டைகள்'.. அம்பலப்படுத்திய ஜெயராமன்.. !

Google Oneindia Tamil News

டெல்லி: தந்தை ஜெயராமால் எந்த அளவுக்கு ஜெயலலிதா சந்தோஷமடைந்தார் என்று தெரியவில்லை. ஆனால் ஜெயராமன் என்ற பெயர் கொண்ட ஒருவரால்தான் இன்று பரப்பன அக்ரஹாரா சிறையில் வாடும் நிலைக்கு அவர் போய் விட்டார்.

போயஸ் தோட்டத்தில் பணியாற்றி வந்தவர்தான் இந்த ஜெயராமன். இவர் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம்தான் சொத்துக் குவிப்புவழக்கில் முக்கியத் திருப்பமாக அமைந்தது.

ஜெயராமனும், போயஸ் தோட்டத்தின் இன்னொரு ஊழியரான ராம் விஜயன் என்பவரும்தான் ஜெயலலிதாவுக்கும், சசிகலா உள்ளிட்டோருக்கும் எதிரான வலுவான ஆதாரமாக மாறிப் போய் விட்டார்கள்.

The Former 'Bag Man' That Brought Down Jayalalithaa

போயஸ் கார்டன் ஜெயராமன்

ஜெயலலிதா முதல் முறையாக முதல்வர் பதவியில் இருந்தபோது போயஸ் தோட்டத்தில் பணியாற்றி வந்தவர் இந்த ஜெயராமன். அதேபோல பணியாற்றி வந்த இன்னொரு ஊழியர் ராம் விஜயன்.

'எடுப்பு' வேலைகள்

ஜெயலலிதா வீட்டில் சசிகலா உள்ளிட்டோர் ஏவிய வேலைகளைச் செய்து வந்துள்ளனர் இருவரும். ஏவிய வேலைகள் என்றால் சாதாரணமான வேலை இல்லை பாஸ்.. பண மூட்டைகளைக் கையாளுகிற அதி பயங்கரமான வேலை.

வங்கிகளுக்குப் போன பண மூட்டைகள்

இதுகுறித்து ஜெயராமன் தனி நீதிமன்றத்தில் அளித்துள்ள வாக்குமூலத்தில், அவ்வப்போது என்னிடம் பண மூட்டைகளை ராம் விஜயன் கொடுப்பார். சசிகலா கொடுத்ததாக கூறுவார். அவற்றை நான் வங்கிகளுக்கு கொண்டு போய் டெபாசிட் செய்து விட்டு வருவேன்.

ஜெ., சசி வங்கிக் கணக்குகளில்

இந்த பணத்தை நான் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரது பெயர்களில் இருந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் சேர்த்து விட்டு வருவேன்.

தொடர்ந்து பண மூட்டை

சசிகலாவே என்னைப் பலமுறை கூப்பிட்டு பண மூட்டைகளைக் கொடுத்து பணத்தை போட்டு விட்டு வரச் சொல்வார். இது தொடர்ச்சியாக நடந்து வந்தது என்று கூறியுள்ளார் ஜெயராமன்.

ரூ. 2 கோடி டூ ரூ. 50 கோடி

இந்த வாக்குமூலத்தை வைத்துத்தான் ஜெயலலிதா, சசிகலா எப்படியெல்லாம் பணத்தைக் கையாண்டனர், வங்கிக் கணக்குகளில் சேர்த்தனர், எங்கிருந்து இவை வந்தன என்பது குறித்த முக்கிய ஆதாரத்தை கோர்ட்டில் அரசுத் தரப்பு வைக்க முடிந்ததாம். 1991ம் ஆண்டு ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ. 2 கோடி மட்டுமே. ஆனால் ஐந்து ஆண்டுகளில் அது ரூ. 50 கோடிக்கும் மேலாக உயர்ந்ததும் இப்படித்தான் என்றும் ஆதாரத்தை வலுவாக்கியது அரசுத் தரப்பு.

கணக்கில் வராத பணம்

ஜெயராமன் சொன்னது அத்தனையும் கணக்கில் வராத பணம் என்பதையும் அரசுத் தரப்பு நிரூபித்துள்ளது. மேலும் இந்தப் பணம் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் வீட்டிலிருந்தே வங்கிகளுக்குப் போனதையும் அரசுத் தரப்பு ஜெயராமன் வாக்குமூலம் மூலமாக நிரூபித்தது.

பேசாமலேயே இறந்து போன ராம் விஜயன்

அதேசமயம், ராம் விஜயன் கோர்ட்டில வாக்குமூலம் கொடுக்காமலேயே, கொடுப்பதற்கு முன்பே இறந்து போய் விட்டார். ஆனால் அவர் மற்றும் ஜெயராமன், வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்தபோது அதுதொடர்பான ஸ்லிப்களில் போட்டிருந்த அவர்களது கையெழுத்துக்களை வைத்து அரசுத் தரப்பு தனது பலத்தைக் கூட்டிக் கொண்டது.

கடைசி வரை உறுதியாக இருந்த ஜெயராமன்

இதில் முக்கியமானது என்னவென்றால் தனது வாக்குமூலத்தில் கடைசி வரை உறுதியாக இருந்தார் ஜெயராமன். 2011ம் ஆண்டு அவரிடம் குறுக்கு விசாரணை நடந்தது. அப்போதும் தான் ஏற்கனவே சொன்னதை அப்படியே திருப்பிச் சொன்னார், பிறழ் சாட்சியம் அளிக்கவில்லை. இதுவும் ஜெயலலிதா தரப்புக்கு எதிராக போய் விட்டது.

எங்கே இருக்கிறார் ஜெயராமன்...?

தற்போது ஜெயராமன் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் அவர் கொடுத்த வாக்குமூலம் ஜெயலலிதாவை சிறைச்சாலைக்குள் கொண்டு போய் விட்டு விட்டது.

English summary
Nearly 250 witnesses were brought to court by the prosecution to prove J Jayalalithaa had used the first of her three terms as Chief Minister of Tamil Nadu to illegally acquire more than Rs. 50 crore worth of assets. One of them was crucial in proving the 18-year-old case against her, leading to a sentence of four years in jail for one of the most powerful and popular politicians in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X