For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோசமாக கலாய்க்கிறார்கள்.. சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த முடிவு.. ஸ்மிரிதி இராணி அதிர்ச்சி தகவல்

சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்மிரிதி இராணி அதிர்ச்சி தகவல் தெரிவித்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்மிரிதி இராணி அதிர்ச்சி தகவல் தெரிவித்து இருக்கிறார்.

டெல்லியில் நடந்த பத்திரிக்கை நிகழ்வு ஒன்றில் அவர் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார். தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இராணியின் இந்த அறிவிப்பு நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியில் ஏற்படுத்தி உள்ளது.

அதே சமயத்தில் சமூக வலைதளங்கள் நல்ல வகையில் உதவுவதாகவும், முக்கியமான விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க பயன்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

கலாய்க்கிறார்கள்

கலாய்க்கிறார்கள்

சமூக வலைதளங்கள் குறித்து பேசிய போது ''டிவிட்டரில் அரசையும், அரசியல்வாதிகளையும் மோசமாக கலாய்க்கிறார்கள். விதவிதமாக எதிர்த்து பேசுகிறார்கள். இதை கவனமாக பார்த்துக் கொண்டு இருக்கிறோம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அந்த பக்கம்

அந்த பக்கம்

இதன் காரணமாக தன்னுடைய டிவிட்டர் பக்கத்தை பார்ப்பதே இல்லை என்று ஸ்மிரிதி இராணி தெரிவித்து இருக்கிறார். முக்கியமான தகவல்களை பார்க்க மட்டுமே டிவிட்டர் பக்கம் செல்வேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அங்கு என்ன மாதிரியான விஷயங்கள் நடக்கிறது என்று தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல் பிரச்சனை

முதல் பிரச்சனை

மேலும் ''என்னுடைய முதல் பிரச்சனையே, இப்போது எல்லோருக்கும் பேச இடம் கிடைத்துவிட்டது என்பதுதான். தொழில்நுட்பம் அரசை கட்டுப்படுத்துவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. செய்திகள் கூட சமூக வலைத்தளத்தை நம்பித்தான் இருக்கிறது'' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நடவடிக்கை எடுக்கப்படும்

நடவடிக்கை எடுக்கப்படும்

முக்கியமாக ''இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றுள்ளார். அரசுக்கு எதிராக பேசப்படும் விஷயங்களை கண்காணித்து வருகிறோம். விரைவில் இதை கட்டுப்படுத்த உரிய வழிமுறைகளை பின்பற்றுவோம்'' என்று ஸ்மிரிதி இராணி தெரிவித்து இருக்கிறார்.

English summary
The government will control social media soon says Information and broadcasting minister Smriti Irani. She says that Twitter gave everyone a chance to speak against the government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X