For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக். தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி.. தீவிர கண்காணிப்பில் காஷ்மீர்.. உளவுத்துறை பகீர் தகவல்!

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் மேலும் பல தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்பதால் காஷ்மீர் எல்லைப் பகுதியில் உச்சக்கட்டப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் மேலும் பல தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்பதால் காஷ்மீர் எல்லைப் பகுதியில் உச்சக்கட்டப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 12 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் முயற்சியில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே இரண்டாவது முறையாக தீவிரவாதிகளின் ஊடுருவல் நேற்று முறியடிக்கப்பட்டது.

தீவிரவாதிகள் தாக்குதல்

தீவிரவாதிகள் தாக்குதல்

இதுவரை மொத்தம் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் சுட்டதில் வீரர் ஒருவர் உயிரிழந்தார். 2 .ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் காயமடைந்தனர்.

தீவிரவாதிகள் தாக்குதல்

தீவிரவாதிகள் தாக்குதல்

இதுவரை மொத்தம் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் சுட்டதில் வீரர் ஒருவர் உயிரிழந்தார். 2 .ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் காயமடைந்தனர்.

தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சில் செக்டார் எல்லைக் கட்டுப்பாடு கோட்டில் 7ஆம் தேதி இரவு பாகிஸ்தான் பகுதியில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஊடுருவல் முறியடிப்பு

ஊடுருவல் முறியடிப்பு

கடந்த 48 மணி நேரத்தில் குரேஷ், மச்சில், நவ்காம் மற்றும் உரி செக்டார் பகுதிகளில் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் உரி செக்டார் மற்றும் குரேஷ் பகுதிகளில் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தொடர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உளவுத்துறை எச்சரிக்கை

உளவுத்துறை எச்சரிக்கை

இதனிடையே எல்லைப் பகுதியில் ஏராளமான தீவிரவாதிகள் ஊடுருவ காத்திருப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால் காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

English summary
The IB official further added that militants from Pakistan would also attempt several infiltrations. Jammu and Kashmir has been placed under 'very' high alert after security personnel carried out a series of attacks. These attacks come in the wake of a major crackdown by the Indian Army in the past month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X