For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அயோத்தியில் மீசை இல்லாமல் ராமர் சிலையை வைத்தால் என்னை போன்ற ராம பக்தர்களுக்கு பயனில்லை.. சம்பாஜி

Google Oneindia Tamil News

அயோத்தி: அயோத்தியில் கட்டப்பட உள்ள கோவிலில் உள்ள ராமர் சிலைக்கு மீசை இருக்க வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பின் தலைவர் சம்பாஜி பிதே திங்களன்று தெரிவித்தார்.

ராம் கோயிலின் 'பூமி பூஜை' புதன்கிழமை அன்று உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் நடைபெற உள்ளது, இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

the idol of Lord Ram in the proposed temple at Ayodhya should have a moustache: Sambhaji Bhide

இந்நிலையில் அயோத்திக்கு அருகிலுள்ள சாங்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சம்பாஜி பிதே "நீங்கள் நிறுவப் போகிற ராமர், லக்ஷ்மணன் சிலைகளுக்கு மீசை இருக்க வேண்டும் என்று கோவிந்த் கிரிஜி மகாராஜிடம் (கோயில் அறக்கட்டளையின் அறங்காவலர்) கேட்டுள்ளேன்.

நீங்கள் தவறுகளைச் சரிசெய்யாவிட்டால் (ராமர் சிலைகளுக்கு மீசை இல்லாமல் போனால்) என்னைப் போன்ற ராமர் பக்தருக்கு, கோயில் கட்டப்பட்டாலும், அது பயனில்லை." என்று கூறியுள்ளேன்.

அயோத்திக்கு விமானம் மூலம் காஞ்சியில் இருந்து புனித மண், செங்கற்கள்- சங்கரமட மடாதிபதி விஜயேந்திரர்அயோத்திக்கு விமானம் மூலம் காஞ்சியில் இருந்து புனித மண், செங்கற்கள்- சங்கரமட மடாதிபதி விஜயேந்திரர்

கோயில் தளத்தில் "பூமி பூஜை" விழாவைத் தொடங்குவதற்கு முன்பு, சத்ரபதி சிவாஜி மகாராஜின் உருவத்தை வணங்க வேண்டும். அயோத்தி கோயில் பூமி பூஜை நடைபெறும் ஆகஸ்ட் 5 ஆம் தேதியை தீபாவளி மற்றும் தசரா போன்ற பண்டிகையை போன்று கொண்டாட வேண்டும்" என்றார்.

Recommended Video

    அயோத்திக்கு விமானம் மூலம் காஞ்சியில் இருந்து புனித மண்- விஜயேந்திர சரஸ்வதி

    கோவில் கட்டுவது கோவிட் -19 தொற்றுநோயை ஒழிக்க உதவும் என்று சிலர் நினைக்கிறார்கள் என்று தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் கருத்து தெரிவித்திருப்பது குறித்து பேசிய பிதே, மூத்த அரசியல்வாதி ஒரு மரியாதைக்குரிய நபர் என்றும், அப்படி ஒரு கருத்தை அவர் வெளியிட்டிருக்கக்கூடாது என்றும் கூறினார்.

    English summary
    Hindutva leader Sambhaji Bhide on Monday said Ayodhya Temple with Ram & Laxman Idols Sans Moustaches of No Use to Devotees Like Me.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X