For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜிஎஸ்டியை அமல்படுத்துவதால் என்னென்ன நன்மைகள்? #gstrollout #GoodsandServicesTax #GST

ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் பல பொருட்களின் மீதான வரி குறையும் என கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் பல பொருட்களின் மீதான வரி குறையும் என கூறப்படுகிறது. மேலும் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி அல்லது ஜிஎஸ்டி என்பது ஒரு புதிய திட்டம் அல்ல. அது 1954ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் முதன்முதலாக அமல்படுத்தப்பட்டது.

அதன் பின்னர், பல நாடுகள் இந்த திட்டத்தை பின்பற்றி, தற்போது இது ஒரு உலகளளவில் பயன்படுத்தப்படும் ஒருதிட்டமாக உள்ளது. தற்போது இந்தியா இத்திட்டத்தை பின்பற்ற உள்ளது.

நாளை முதல் ஜிஎஸ்டி

நாளை முதல் ஜிஎஸ்டி

இதற்கான அறிமுக விழா இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து ஜூலை ஒன்றாம் தேதியான நாளை முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத்தப்படுகிறது.

உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்

உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்

பல மாநிலங்களும் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த ஜிஎஸ்டி சட்டத்தால் என்னென்ன நன்மைகள் என்பது குறித்த சில தகவல்கள், இந்த ஜிஎஸ்டி சட்டத்தின் மூலம் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருட்களின் மீதான வரி குறையும்

பொருட்களின் மீதான வரி குறையும்

ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் பல பொருட்களின் மீதான வரி குறையும் எனத் தெரிகிறது. ஒரே வரி விதிக்கப்படுதால் வரிக்கு வரி விதிக்கும் வாய்ப்பு இருக்காது.

வரி லாபம் நுகர்வோருக்கு

வரி லாபம் நுகர்வோருக்கு

பொருட்களின் விலை உயர்வு வாய்ப்புகளை இந்த ஜிஎஸ்டி சட்டத்தின் மூலம் தடுக்க முடியும். பொருட்கள் மற்றும் சேவைகளில் உள்ள வரி லாபம் நுகர்வோரை சென்றடையும் என தெரிகிறது.

வரிச்சுமையை குறைப்பதே..

வரிச்சுமையை குறைப்பதே..

அதிக வரிச் சுமையைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். பொதுவாக மத்திய, மாநில அரசுகள் பொருள் உற்பத்தி மதிப்பை அடிப்படையாகக் கொண்டு வரி விதிப்பதில்லை. இருப்பினும் பல்வேறு நிலைகளில் வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படும். இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை மறைமுகமாக பாதிக்கிறது. வரி ஏய்ப்பு, குறைந்த வரி ஆகியவற்றை தவிர்ப்பதோடு தொழில் புரிவதை இந்த ஜிஎஸ்டி சட்டம் எளிதாக்கும் எனக் கூறப்படுகிறது.

English summary
The implementation of the GST legislation is said to reduce tax on many commodities. Furthermore, domestic production will increase.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X