For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அங்குதான் தனித்து நிற்கிறார் தீதி.. தனது திட்டத்தில் உறுதியாக இருக்கும் மமதா.. களமிறங்கினார்!

கருத்து கணிப்புகள் எப்படி வந்தால் என்ன, நம் திட்டத்தை நினைத்தபடி செயல்படுத்துவோம் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உறுதியாக இருக்கிறார்.

Google Oneindia Tamil News

கொல்கத்தா: கருத்து கணிப்புகள் எப்படி வந்தால் என்ன, நம் திட்டத்தை நினைத்தபடி செயல்படுத்துவோம் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உறுதியாக இருக்கிறார்.

நேற்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. எதிர்க்கட்சிகள் கொஞ்சமும் நினைக்காத முடிவுகள் நேற்று வெளியானது.

அதன்படி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி பெரிய அளவில் வெற்றிபெறும் என்று கணிப்புகள் கூறுகிறது. காங்கிரஸ் கூட்டணி, மற்ற எதிர்க்கட்சிகள் எல்லாம் மிக மோசமாக மண்ணை கவ்வும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

பாஜகவிற்கு மட்டும்தான் குட் நியூஸ்.. மோடிக்கு ரொம்ப பேட் நியூஸ்.. எக்ஸிட் போலால் அதிர்ச்சியில் நமோ?பாஜகவிற்கு மட்டும்தான் குட் நியூஸ்.. மோடிக்கு ரொம்ப பேட் நியூஸ்.. எக்ஸிட் போலால் அதிர்ச்சியில் நமோ?

வருத்தம்

வருத்தம்

இந்த கணிப்புகள் எதிர்கட்சிகளை மனதளவில் உடைத்து போட்டு உள்ளது. தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வரும் என்று அவர்கள் நினைத்து இருந்த நேரத்தில், இப்படி முடிவுகள் வந்தது, அவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கட்சிகள் எல்லாம் பெரிய குழப்பத்தில் இருக்கிறார்கள்.

என்ன ஆனது

என்ன ஆனது

  • இந்த கணிப்பு காரணமாக பின் வரும் சம்பவங்கள் எதிர்க்கட்சிகளுக்கு நடந்துள்ளது.
    • ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் டெல்லி பயணம் காலை ரத்து செய்யப்பட்டுள்ளது.
      • எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தவில்லை என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
        • சோனியாவை மாயாவதி பார்க்க இருந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது.
          • மே 23ம் தேதி எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்த இருந்த திட்டமே கைவிடப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
எப்படி எல்லாம்

எப்படி எல்லாம்

இதற்கு எல்லாம் காரணம், எதிர்க்கட்சிகள் மனரீதியாக அதிர்ச்சியில் இருப்பதுதான் என்கிறார்கள். ஆம் கருத்து கணிப்புகள் இப்படி வரும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கவில்லை என்பதே இந்த '' மீட்டிங் ரத்துக்கு'' காரணம் என்கிறார்கள். ஆனால் அங்குதான் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வேறுபடுகிறார். அங்குதான் அவர் தனித்து நிற்கிறார்.

மமதா ஏன்

மமதா ஏன்

நேற்று கருத்து கணிப்புகள் வெளியான உடன் அதை லெப்ட் ஹேண்டில் அசால்ட்டாக தள்ளி வைத்தவர்தான் மமதா. இதெல்லாம் பாஜகவின் திட்டம். வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடு நடக்க இப்படி நாடகம் ஆடுகிறார்கள் என்று அசால்ட்டாக மமதா டிவிட் செய்தார். அப்போதுதான் எதிர்க்கட்சிகள் ''ஓ இப்படி கூட இருக்குமோ'' என்று நம்பிக்கை அடைய தொடங்கினார்கள்.

கொஞ்சம் கூட இல்லை

கொஞ்சம் கூட இல்லை

இந்த நிலையில் கருத்து கணிப்பு முடிவுகளை குறித்து கவலைப்படாமல், தற்போது மமதா தனது அடுத்த பணிகளை கவனிக்க தொடங்கி இருக்கிறார். மே 21ம் தேதி, நாளை மாலை இவர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க உள்ளார். அதன்பின் 22ம் தேதி காலை மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவை சந்திக்க இருக்கிறார். இந்த சந்திப்புதான் பிரதமரை தேர்வு செய்ய போகிறது என்கிறார்கள். இன்று இரவும் அவர் முக்கிய தலைவர்களை சந்திக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

அவர் இப்படித்தான்

அவர் இப்படித்தான்

கணிப்புகள் எப்படி வந்தாலும் வருத்தம் இல்லை என்று இவர் களமிறங்கி செயல்பட்டு வருகிறார். கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமார் சிக்கலில் இருந்த போது, எல்லா எதிர்கட்சிகளை தனக்கு பின்னால் கொண்டு வந்தவர்தான் மமதா. தற்போது அதே மமதா இன்னொரு பிரச்சனையின் போது அனைத்து எதிர்க்கட்சிகளையும் தனக்கு பின்னால் கொண்டு வந்து இருக்கிறார். மீண்டும்.. மீண்டும்.. தான் ஒரு தீ என்பதை நிரூபிக்கிறார் இந்த தீதி!

English summary
The Mamata's Screen Play: She doesn't care what is going on, She will go with a plan as always.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X