For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாட்டிலேயே அதிகபட்ச வெப்பநிலை.... ராஜஸ்தானில் வெயில் சுட்டெரித்தது.

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: நாட்டிலேயே அதிகபட்ச வெப்பநிலையாக ராஜஸ்தான் மாநிலத்தில் 50.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் சுட்டெரித்தது.

கடந்த சில நாட்களாகவே வடமாநிலங்களில் இயல்பைகாட்டிலும் அதிக வெப்பம் நிலவி வருகிறது. ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தின் கிழக்கு பகுதிகளுக்கு இந்திய வானிலை மையம் அனல் காற்று மற்றும் வெப்ப எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்தநிலையில், பாலைவன மாநிலமான, ராஜஸ்தானில் உள்ள சுருவில் 50.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இதற்கு முந்தைய அதிக பட்ச வெப்ப நிலையானது 50.6 செல்சியஸ் ஆகும். கடந்த 2016 ம் ஆண்டு ஜோத்பூர் மாவட்டம், பலோடி பகுதியில் வெப்பம் பதிவானது.

ஒரு விழியில் இன்ப கண்ணீர்.. இன்னொரு விழியில் துன்ப கண்ணீர்.. வைகோ உருக்கம் ஒரு விழியில் இன்ப கண்ணீர்.. இன்னொரு விழியில் துன்ப கண்ணீர்.. வைகோ உருக்கம்

மக்கள் கடும் அவதி

மக்கள் கடும் அவதி

இது பாரன்கீட் அளவில் 123.44 டிகிரியாகும். நாட்டிலேயே இந்த ஆண்டில் பதிவான மிக அதிகபட்ச வெப்பம் இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெயிலின் உக்கிரம் தாங்காமல் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதற்கு அடுத்தபடியாக கங்கா நகரில் 49 டிகிரி, பிகானீரில் 47.9 டிகிரி ,ஜெய்ப்பூரில் 45.6 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பருவநிலை மாற்றம்

பருவநிலை மாற்றம்

அனல் காற்று காரணமாக ராஜஸ்தானில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். இதற்கிடையே, மேற்கு ராஜஸ்தானிலும், மத்தியப் பிரதேசத்திலும் சிவப்பு வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் நகரமயமானதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் வெப்பநிலை அதிகரித்து வருகின்றது. இதில், இந்தியாவின் டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் முன்னிலையில் உள்ளன.

வெப்பம் குறைவு

வெப்பம் குறைவு

நாட்டிலேயே இமாச்சலப் பிரதேசத்தில் வெப்ப அலை நேற்று குறைவாகக் காணப்பட்டது. தலைநகர் டெல்லியிலும் வெப்பம் குறைவாகவே இருந்தது. அங்கு அதிகபட்சமாக 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

அனல் காற்று அதிகமாக வீசுவதால், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வெயில் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கி உள்ளனர்.

English summary
The maximum temperature in the country: 50.8 degrees Celsius heat recorded in Rajasthan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X