For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகா., குஜராத்தில் குறைந்து வரும் பெண் குழந்தைகள்... காரணம் பெண் சிசுக்கொலை, சிறார் திருமணம்!

Google Oneindia Tamil News

மும்பை: இந்தியாவின் இரு பெரும் பணக்கார மாநிலங்களான குஜராத்தில் 73 சதவீத அளவிலும், மகாராஷ்டிராவில் 55 சதவீத அளவிலும் சோனோகிராபி எனப்படும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் மையங்களுக்குப் பற்றாக்குறை உள்ளதாக இந்தியாஸ்பெண்ட் கட்டுரை கூறுகின்றது.

அதன்படி, இந்தியாவிலேயே இந்த இரண்டு மாநிலங்களில் தான் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிராவின் மாரத்வாடா பகுதியில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 807 பெண் குழந்தைகளே உள்ளனர்.

இதே போல், குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் ஆயிரம் ஆண குழந்தைகளுக்கு 831 பெண் குழந்தைகள் என்ற விகிதாச்சாரமே காணப்படுகிறது. தேசிய அளவில் இது 914 என்ற விகிதத்தில் உள்ளது.

குழந்தைத் திருமணம்...

குழந்தைத் திருமணம்...

மகாராஷ்டிராவில் கடந்த 2013 -14ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட குழந்தைத் திருமணம் தொடர்பான 603 வழக்குகளில் 23ல் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதம் 580 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

குஜராத்தில்...

குஜராத்தில்...

குஜராத் மாநிலத்தில் நிலைமை இன்னும் மோசம். அங்கு பதிவு செய்யப்பட்டுள்ள 659 குழந்தைத் திருமண வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

சட்ட விழிப்புணர்வு...

சட்ட விழிப்புணர்வு...

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் என இந்தியாவின் இரண்டு பெரிய பணக்கார மாநிலங்களில் இவ்வாறு பெண் குழந்தைகள் குறித்த சட்டத்தில் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது வேதனைக்குரிய விசயமாகும்.

பெண் சிசுக் கொலைகள்...

பெண் சிசுக் கொலைகள்...

புத்தகத்தில் இருக்கும் சட்டங்கள் இங்கு நடைமுறைக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. உயரதிகாரிகள் மாநிலங்களிலுள்ள சோனோகிராபி சென்டர்களை கண்காணிப்பதன் மூலம் கருவிலேயே பெண் சிசுக் கொலைகளைத் தடுக்க வேண்டும்.

ஆய்வுகள் குறைவு...

ஆய்வுகள் குறைவு...

சிஏஜி அறிக்கையின் படி, மகாராஷ்டிராவில் கடந்த 2013-14ம் ஆண்டுகளில் 55 சதவீதம் இது போன்ற ஆய்வுகள் குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இது கடந்த 2011-12ம் ஆண்டில் 43 சதவீதமாக இருந்தது. இது குஜராத்தில் கடந்த 2013-14ம் ஆண்டில் 73 சதவீதமாக இருந்துள்ளது.

பிசி-பிஎண்டிடி சட்டப்படி...

பிசி-பிஎண்டிடி சட்டப்படி...

மகாராஷ்டிராவில் 2014ம் ஆண்டு பிசி - பிஎன்டிடி சட்டத்தின் கீழ் 481 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குஜராத்தில் இது 181 வழக்குகளாக இருந்தன. அதில் 49 வழக்குகள் மட்டுமே முழுமைாயக நடந்தன. 6 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டனர். தண்டனையும் கூட சிறை வாசம், உரிமம் ரத்து, அபராதம் என்ற அளவில்தான் இருந்தது.

முக்கியக் காரணம்...

முக்கியக் காரணம்...

6 மாதத்தில் இதுபோன்ற வழக்குகளை முடிக்க வேண்டும் என்பது சுப்ரீம் கோர்ட் உத்தரவு. ஆனால் பல வழக்குகள் 12 வருடம் கூட இழுத்தடித்துள்ளன. பிசி - பிஎன்டிடி சட்டத்தை சரிவர அமல்படுத்தாததால்தான் பெண் குழந்தை செக்ஸ் சதவீதம் குறைந்து போனதற்கு முக்கியக் காரணம்.

ஆண் -பெண் குழந்தைகள் விகிதம்...

ஆண் -பெண் குழந்தைகள் விகிதம்...

ஆண் - பெண் குழந்தை சதவீதம் சந்திரப்பூர், கோலாப்பூர், சங்கிலி, சதாரா ஆகிய மாவட்டங்களில் 2001 முதல் 2011 இடையிலான கால கட்டத்தில் அதிகரித்துள்ளது. 31 மாவட்டங்களில் இக்காலகட்டத்தில் அது குறைந்துள்ளது.

ஸ்கேன் மையங்களே காரணம்...

ஸ்கேன் மையங்களே காரணம்...

செக்ஸ் ரேஷியோ என்பது நாடு தழுவிய அளவில் உயர்ந்து வரும் அதேசமயம், மகாராஷ்டிராவிலும், குஜராத்திலும் அது குறைந்து வருகிறது. மேலும் இந்த மாநிலங்களில் நகர்ப்புறங்களில் குறைவாக உள்ளது. ஆனால் கிராமப்புறங்களில் அதிகமாகவே உள்ளது. நகர்ப்புறங்களில் ஸ்கேன் மையங்கள் அதிகம் இருப்பதே இந்த நிலைக்குக் காரணம்.

விகிதம்...

விகிதம்...

நகர்ப்புற இந்தியாவில் சிறார் செக்ஸ் சதவீதம் 902 ஆக இருக்கிறது. கிராமங்களில் இது 919 ஆக உள்ளது. மகாராஷ்டிராவில் இது முறையே 899, 890 ஆக உள்ளது. குஜராத்தில் 852, 914 ஆக இருக்கிறது.

சிறார் திருமணம்...

சிறார் திருமணம்...

சிறார் திருமணங்கள் இரு மாநிலங்களிலும் அதிக அளவில் நடக்கிறது. 10 முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கு இங்கு அதிக அளவில் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. பெரும்பாலும் கட்டாயத் திருமணம்தான். ஆனால் இது வெளியுலகுக்கு வருவதே இல்லை.

5வது இடத்தில் மஹாராஷ்டிரா...

5வது இடத்தில் மஹாராஷ்டிரா...

இந்தியாவில் கிட்டத்தட்ட 1.7 கோடி அளவிலான 10 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறார்கள் திருமணமாகி வாழ்க்கைக்குள் அனுப்பப்பட்டுள்ளனர். இதில் மகாராஷ்டிரா 5வது இடத்தில் உள்ளது. இங்கு 10.5 லட்சம் சிறார்களுக்கு திருமணம் நடந்துள்ளது. குஜராத் 7வது இடத்தில் உள்ளது. அங்கு கிட்டத்தட்டட 90 ஆயிரம் சிறார்களுக்கு திருமணாகியுள்ளது.

English summary
There is a shortfall of 73% and 55% in inspections of sonography centres in the western states of Gujarat and Maharashtra, two of India’s richest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X