For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெ. தரப்பு வைத்த வாதங்களும் அதை தவிடுபொடியாக்கிய அரசு தரப்பு பதிலடிகளும்!

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூர்: ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பி வைத்த சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் தரப்பு முன்வைத்த வாதங்களை அரசு தரப்பான அதிரடி ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்து திக்குமுக்காடை வைத்ததது.

1991-96ஆம் ஆண்டு காலத்தில் தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த காலத்தில் அவர் வாங்கிய சம்பளம் ரூ1. இதன்படி 5 ஆண்டுகாலத்தில் அவர் சம்பாதித்த பணம் ரூ60. ஆனால் இந்த காலத்தில் அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ66 கோடி சொத்து குவித்தார் என்பதுதான் இந்த வழக்கு.

The Money Trail That Nailed Jayalalithaa in Court

இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பு முன்வைத்த வாதங்களும் அரசு தரப்பு அளித்த பதில்களும்

  • 1991-96ஆம் ஆண்டு காலத்தில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் லெக்ஸ் பிராப்பர்டி, ராம்ராஜ் அக்ரோ, மெடோ அக்ரோ, ரிவெர்வே அக்டோ, இந்தோ- தோகா கெமிக்கல்ஸ், சிங்கோரா ஆகிய நிறுவனங்கள் மூலம் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் வாங்கினர். ஆனால் இந்த நிறுவனங்கள் எதனிலும் ஜெயலலிதா இயக்குநராகவோ, பங்குதாரராகவோ இருந்தது இல்லை என்பது ஜெ. தரப்பு வாதம்.
  • இந்த நிறுவனங்களுக்கு ஜெயலலிதா இயக்குநராக இருக்கும் ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ் சார்பில் ஏராளமான காசோலைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் ஜெயலலிதாவே கையெழுத்திட்ட செக்குகளும் இருக்கிறது என்று ஆதாரம் காட்டியது அரசு தரப்பு.
  • ஜெயா எண்டர்பிரைசஸ் வெளியிடும் நமது எம்ஜிஆர் நாளேட்டுக்கான சந்தா ரூ14 கோடி வசூலிக்கப்பட்டதாக கூறிய ஜெயலலிதா தரப்பு அதற்கான சிலிப்புகளை 2003ஆம் ஆண்டு நீதிமன்றத்தின் முன்பு தாக்கல் செய்தது.
  • ஆனால் அரசு தரப்போ 2001ஆம் ஆண்டு ஜெயா எண்டர்பிரைசஸ் நிறுவனமானது, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் அதிகார்பபூர்வமாக, அனைத்து சந்தாதாரர் பட்டியலும் காணாமல் போய்விட்டது. இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரம் இருக்கிறது. இதனால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சந்தா ஸ்லிப்புகளை நம்ப முடியாது.
  • சசிகலாவுக்கு சொந்தமான சூப்பர் டூப்பர் டிவியானது சாட்டிலைட் டிஸ்களை வாடிக்கையாளர்களுக்கு விற்றதன் மூலம் ரூ6 கோடி வருவாய் கிடைத்ததது என்றும் இதற்காக ரூ5 ஆயிரம் முதலீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது என்றும் வாதிடப்பட்டது. ஆனால் அரசுத் தரப்போ முதலீட்டாளர்கள் போலி பெயர்களில் உருவாக்கப்பட்டவையே என்று அம்பலப்படுத்தியது.
  • வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்துக்கு ஜெயலலிதா ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை என்று முதலில் ஜெயலலிதா வழக்கறிஞர்கள் வாதிட்டனர். பின்னர் பெண் வீட்டாரே அனைத்தையும் செலவு செய்தனர் என்று கூறினர்.
  • ஆனால் ரூ26 லட்சம் வரைக்கும் திருமண நிகழ்வுகளுக்காக ஜெயலலிதாவை கையெழுத்திட்டு கொடுத்த செக் ஆதாரங்களை அரசு தரப்பு வெளியிட்டது.

English summary
Even as Jayalalithaa today challenged her conviction in a 1996 case of corruption, prosecutors claim that the paper trail of money provides clinching evidence that the former Tamil Nadu Chief Minister used unaccounted for cash to buy land worth huge amounts of money.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X