For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாலை 6 மணிக்குதான் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு.. உணவு இடைவேளை "கட்"!

இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்குத்தான் நடக்கும் என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்குத்தான் நடக்கும் என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை அதிர வைக்க போகும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடக்கிறது. தெலுங்கு தேசம் கட்சி சார்பாக பாஜகவிற்கு எதிராக லோக் சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

The no-confidence motion will take place at eve 6O clock, NO for lunch

பரபரப்பாக இன்று கூட இருக்கும் இன்றைய லோக் சபா கூட்டத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. இந்த கூட்டம் இன்று மாலை வரை நடக்கும்.

மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு மாலை 6 மணிக்குத்தான் நடக்க உள்ளது.

காலை 11.30 மணிக்கு எதிர்க்கட்சியினர் பேசுவார்கள். ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்பட்ட நேரத்தில் உரையாற்றுவார்கள். அதன்பின் பாஜக மூன்றரை மணி நேரம் பேசும். இதில் மோடி ஒரு மணி நேரம் பேச உள்ளார்.

அதன்பின் மாலை 6 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்கும். இதற்கு இடையில் உணவு இடைவேளை கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.

English summary
The no-confidence motion will take place at eve 6'O clock, NO for lunch.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X