For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் உடலில் பாம் இருக்கிறது.. நடு வானில் லெட்டர் கொடுத்து மிரட்டிய பெண்.. கொல்கத்தா விமானத்தில் பகீர்

கொல்கத்தாவில் இருந்து மும்பை சென்ற விமானம் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

கொல்கத்தா: கொல்கத்தாவில் இருந்து மும்பை சென்ற விமானம் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து மும்பை நோக்கி வந்த ஏர்ஏசியா விமானம் I5316ல் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த விமானத்தில் இருந்த பெண் ஒருவர், விமானம் புறப்பட்டு சில நிமிடத்தில் அங்கிருந்த பணிப்பெண்ணிடம் காகிதம் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த காகிதத்தில் இதை உடனடியாக பைலட்டிடம் கொடுங்கள் என்று எழுதப்பட்டு இருந்தது. இதை சோதித்த, பணிப்பெண், அந்த இடத்திலேயே அதிர்ந்து போனார். காரணம், அந்த காகிதத்தில், விமானத்தில் பாம் வைத்து இருக்கிறேன் என்று எழுதப்பட்டு இருந்தது.

பொருளாதார வீழ்ச்சியால் யாரும் பட்டினியாக இல்லை.. எந்த பாதிப்பும் இல்லை.. எஸ்வி சேகரே சொல்லிட்டாரு! பொருளாதார வீழ்ச்சியால் யாரும் பட்டினியாக இல்லை.. எந்த பாதிப்பும் இல்லை.. எஸ்வி சேகரே சொல்லிட்டாரு!

மிரட்டல்

மிரட்டல்

இதை உடனடியாக விமானியிடம் அந்த பணிப்பெண் கொடுத்தார். அந்த காகிதத்தில், என் உடல் முழுக்க பாம் வைத்துள்ளேன். விமானத்தில் உள்ள என்னுடைய பையிலும் பாம் இருக்கிறது. இதை சற்று நேரத்தில் வெடிக்க வைக்க போகிறேன் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

விமானி என்ன செய்தார்

விமானி என்ன செய்தார்

இதை பார்த்து பதறிப்போன விமானி உடனடியாக விமானத்தை திருப்பினார். மும்பை செல்லாமல் வேகமாக திரும்பி கொல்கத்தா நோக்கி விமானத்தை திருப்பினார். அடுத்த சில மணி நேரத்தில் விமானம் கொல்கத்தாவில் தரையிறங்கியது.

சோதனை செய்தனர்

சோதனை செய்தனர்

இந்த நிலையில் அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தை சோதனை செய்தனர். மோப்ப நாய்கள் உதவியுடன் முழுதாக சோதனை நடந்தது. அதில் விமானத்தில் எந்த விதமான குண்டும் இல்லை என்று உறுதியானது. இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்து தற்போது விசாரித்து வருகிறார்கள்.

யார் இவர்

யார் இவர்

இதில் யாருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணின் பெயர் மோகினி மண்டல் என்று தெரிய வந்துள்ளது. இவர் ஏன் இப்படி பொய்யாக எச்சரிக்கை விடுத்தார் என்று உண்மை வெளியாகவில்லை. உலகம் முழுக்க போர் பீதி இருக்கும் நிலையில் கொல்கத்தாவில் விமானம் ஒன்றில் இப்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டது, பயணிகளை பீதிக்கு உள்ளாகியது.

English summary
The plane did an Emergency Landing after a woman claims to have a bomb on her body in Kolkata to Mumbai flight .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X