For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமரின் பில்டப் பேச்சு.. மக்கள் மனதில் வெறுப்பு, கோபத்தைதான் வரவழைத்தது- ராகுல்

பிரதமரின் பேச்சு மக்களுக்கு வெறுப்பு, கோபத்தைத்தான் வரவழைத்தது என்று ராகுல் காந்தி பேசினார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    மக்களவையில் அனல் பரந்த ராகுல் காந்தியின் பேச்சு...பாஜக அமளி...வீடியோ

    டெல்லி: நாடாளுமன்றத்தில் பிரதமரின் பேச்சு மக்களுக்கு வெறுப்பு மற்றும் கோபத்தைத்தான் வரவழைத்தது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நேற்றைய தினம் கொண்டு வரப்பட்டது. அப்போது பிரதமரின் வெளிநாடு பயணம், கருப்பு பணம், பணமதிப்பிழப்பு ஆகியவை குறித்து ராகுல் கடுமையாக விமர்சனம் செய்தார்.

    The point of yesterday’s debate in Parliament

    எனினும் பேச்சின் முடிவில் பிரதமர் நரேந்திர மோடியை ராகுல்காந்தி கட்டி அணைத்தார். தனது இருக்கைக்கு சென்ற ராகுலை மோடி அழைத்து கைகுலுக்கி காதில் ஏதோ முணுமுணுத்தார்.

    ராகுலின் பேச்சை மோடி பாராட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அன்றைய தினம் மாலை மோடி பேசினார். அப்போது பிரதமர் சீட்டுக்கு ஏன் இத்தனை அவசரம் என்று ராகுலை கிண்டல் செய்தார்.

    மேலும் பெரும்பாலான விஷயத்துக்கு மோடி கடுமையாகவே பேசினார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் மக்களுக்கு வெறுப்பு, அச்சம் மற்றும் கோபத்தை வரவழைத்தது பிரதமர் மோடியின் பேச்சு.

    தனது பேச்சை பில்டப் கொடுப்பதற்காகவே இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
    இந்தியவர்களின் மனதில் அன்பு மற்றும் அக்கறையை பெற்றோம் என நிரூபிக்க போகிறோம். இதுதான் தேசத்தை உருவாக்குவதற்கான ஒரே வழியாகும் என்று ராகுல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    English summary
    Rahul Gandhi tweets about debate in Parliament that PM uses Hate, Fear and Anger in the hearts of some of our people to build his narrative.We are going to prove that Love and Compassion in the hearts of all Indians, is the only way to build a nation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X