For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுதந்திர நாட்டில் குழந்தைகள் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது வெட்கக்கேடு.. ஜனாதிபதி வேதனை

சுதந்திர இந்தியாவில் குழந்தைகள் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது வெட்கக்கேடு என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: சுதந்திர இந்தியாவில் குழந்தைகள் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது வெட்கக்கேடு என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களால் அண்மையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

The rape and abuse of children and women were shameful: President Ramnath govind

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது வெட்கக்கேடு என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

கத்வா சம்பவம் எந்த ஒரு சிறுமிக்கும், பெண்ணுக்கும் இனி நடக்கக்கூடாது என்பதை உறுதி செய்யவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எந்த மாதிரியான சமுதாயத்தை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும் என்றும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

English summary
President of India Ramnath Govind says 70 years after independence, the rape and abuse of children and women were shameful.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X