For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பி உள்ளாட்சி தேர்தல்: யோகியின் கோரக்பூரில் பாஜகவுக்கு ஒரு ஷாக்.. ராகுலின் அமேதியில் காங். தோல்வி!

உத்தரப்பிரதேசம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 16 மாநகராட்சிகளில் 14 மாநகராட்சிகளை ஆளும் பாஜக கைப்பற்றியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    உபி உள்ளாட்சி தேர்தல்: ஆதித்யநாத்தின் கோரக்பூரை இழந்த பாஜக..

    லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தின் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 16 மாநகராட்சிகளில் 14 மாநகராட்சிகளை ஆளும் பாஜக கைப்பற்றியுள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அதற்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, உ.பி.யில் கடந்த 22, 24 மற்றும் 29 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

    முதல் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 52.59 சதவீதம் வாக்குகளும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 49.3 சதவீதம் வாக்குகளும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 53 சதவீதம் வாக்குகளும் பதிவானது.

    நேற்றிரவு முடிவுகள்

    நேற்றிரவு முடிவுகள்

    இந்நிலையில், உ.பி.யில் 652 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மூன்று கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. இதன் முடிவுகள் நேற்றிரவு வெளியானது.

    14 இடங்களில் பாஜக வெற்றி

    14 இடங்களில் பாஜக வெற்றி

    அதன்படி பாஜக போட்டியிட்ட 16 மேயர் பதவிக்கான இடங்களில் 14 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

    முதல்வர் தொகுதியில் தோல்வி

    முதல்வர் தொகுதியில் தோல்வி

    உத்தரப்பிரதச முதல்வரான யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் தொகுதியில் பாஜக தோல்வியை சந்திந்துள்ளது. கோரக்நாத் கோவில் உள்ள 64வது வார்டில் பாஜகவை வீழ்த்தி சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

    2 வார்டுகளில் காங்கிரஸ்

    2 வார்டுகளில் காங்கிரஸ்

    இந்த கோரக்பூர் தொகுதியில் இருந்து 1998ஆம் ஆண்டு முதல் 5 முறை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இங்கு 27 வார்டுகளை பாஜகவும் 18 இடங்களை சமாஜ்வாடி கட்சியும் பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் தலா 2 இடங்களையும் சுயேட்சை வேட்பாளர்கள் 18 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

    அமேதியில் காங்கிரஸ் தோல்வி

    அமேதியில் காங்கிரஸ் தோல்வி

    அதேநேரத்தில் ராகுலின் சொந்த தொகுதியான அமேதியை பாஜக கைப்பற்றியுள்ளது. அமேதியில் உள்ள அனைத்து நகர பஞ்சாயத்துகளிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது.

    16 இடங்களில் 14

    16 இடங்களில் 14

    கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 12 மேயர் இடங்களில் 10 இடங்களை பாஜக கைப்பற்றியது. இம்முறை 16 இடங்களில் 14 இடங்களை கைப்பற்றியுள்ளது.

    வாக்கு சதவீதம் அதிகரிப்பு

    வாக்கு சதவீதம் அதிகரிப்பு

    கடந்த 2012ஆம் ஆண்டு பாஜக 46.2 சதவீத வாக்குகள் பெற்றிருந்தன. ஆனால் இம்முறை பாஜகவின் வாக்கு சதவீதம் 52.5 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The ruling Bharatiya Janata Party won 14 of the 16 mayoral seats in Uttar Pradesh where the civic bodies polls were held in three phases. BJP lost in the CM Yogi Adhithyanath's Gorakpur and congres lost the Amethi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X