For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சமாஜ்வாதி கட்சியின் அகில இந்திய தலைவராக அகிலேஷ் மீண்டும் தேர்வு!

சமாஜ்வாதி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

லக்னோ: சமாஜ்வாதி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் சமாஜ்வாதி கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The Samajwadi Party re-elected Akhilesh as national president for five year

அப்போது சமாஜ்வாதி கட்சியின் தலைவராக அகிலேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனை கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் அறிவித்தார்.

கட்சியின் தலைவர் பொறுப்பு மூன்று ஆண்டுகள் என்பதும் பொதுக்குழுவில் ஐந்து ஆண்டுகள் என நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த 5 ஆண்டுகள் அகிலேஷ் கட்சியின் தலைவராக இருப்பார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான லோக் சபா தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் தலைவராகவும், 2022 உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல்களிலும் அகிலேஷ் யாத் தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

44 வயதான அகிலேஷ், 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியை உருவாக்கிய தனது தந்தை முலாயம் சிங்கையும் சித்தப்பா ஷிவ்பாலையும் கட்சியிலிருந்து ஒதுக்கி வைத்தார். சமாஜ்வாதி கட்சியின் தலைவராக கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி பொறுப்பேற்றுக்கொண்ட அகிலேஷுக்கு ஜனவரி 16ஆம் தேதி சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

English summary
The Samajwadi Party on Thursday re-elected Akhilesh Yadav as national president for five year. The party will now fight the 2019 Lok Sabha and 2022 Uttar Pradesh Assembly elections under Akhilesh's presidentship
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X