For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹனிமூன் பஞ்சாயத்து கூட பரவாயில்ல.. கார்ல புகை வருதுன்னா கூட சுஷ்மாகிட்டதான் வாராங்க

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதிலளித்து நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தாலும், ஆரம்பித்தார்.. ஹனிமூன் போக மனைவிக்கு பாஸ்போர்ட் கிடைக்கவில்லை என ஆரம்பித்து, காரில் அதிகமாக புகை வருகிறது என்பதுவரை அவரிடமே புகார்களை கொட்டி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

டிவிட்டர் மூலம் மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்பவர் சுஷ்மா சுவராஜ். இப்படித்தான், ஃபைசான் பட்டேல் என்பவர் எனது மனைவி பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதால் துருக்கி ஏர்லைன்சில் நான் தனியாகவே ஹனிமூனுக்காக ஐரோப்பா பயணிக்கிறேன், என்று டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

அவரை டிவிட்டரில் தொடர்பு கொண்ட சுஷ்மா, அவரின் மனைவிக்கு டூப்ளிகேட் பாஸ்போர்ட் எடுத்துக்கொடுத்து உதவி செய்தார்.


இந்த தகவல் வெளியான நிலையில், சுஷ்மாவை ஆளாளுக்கு பஞ்சாயத்துக்கு கூப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். பாபு என்டர்பிரைசஸ் என்ற பெயருள்ள டிவிட்டர் ஹேண்டிலில் இருந்து தனது வோல்க்ஸ்வேகன் கார் அதிகமாக புகை விடுவதால் ரோட்டில் ஓட்ட பயமாக இருக்கிறது என்று ஒரு நபர் சுஷ்மாவிடம் புகார் கூறியுள்ளார்.


இதை பார்த்த பல நெட்டிசன்கள் அந்த நபர் மீது கடுப்பானார்கள். எரிச்சலை வெளியில் காட்டிக்கொள்ளாத சுஷ்மா சாந்தமாக, "என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் காரை பழுது பாருங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையெல்லாம் பார்க்கும்போது, சினிமா காட்சியொன்றில் கவுண்டமணி சொல்லும் டயலாக்தான் ஞாபகம் வருகிரது. ஒரே குஷ்டமப்பா.. இது கஷ்டமப்பா.

English summary
The external affairs minister's accessibility on Twitter has led to people making bizarre requests of her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X