For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

12 வயதுக்குட்பட்டவர்களை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு.. விரைவில் மசோதா

12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் வகையில் கிரிமினல் சட்ட திருத்த மசோதா ஒன்று இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் வகையில் கிரிமினல் சட்ட திருத்த மசோதா ஒன்று இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட இருக்கிறது.

சில வாரங்களுக்கு முன்பு 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் வகையில் போக்ஸோ சட்டத்தில் செய்யப்பட்ட அவசர சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

The Union Cabinet approved Criminal Law (Amendment) Bill rape under 12 years old

காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒருவர் 7 நாட்களாக பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். ஒத்த சம்பவம் நாடு முழுக்க பிரச்னையை ஏற்படுத்தியது. அதேபோல் உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் 14 வயது சிறுமியை பாஜக எம்எல்ஏ வன்புணர்வு செய்த விஷயமும் பெரிய பிரச்சனை ஆனது.

இதையடுத்து, சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உடனடியாக சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று அனைத்து கட்சிகளும் கோரிக்கை வைத்து இருந்தது. இதனால் இதற்கு எதிராக அவசர சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது.

மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிலையில் இதற்கு பதிலாக சிறுவர், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் வகையில் கிரிமினல் சட்ட திருத்த மசோதா ஒன்று இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட இருக்கிறது.

அவசர சட்டத்தில் உள்ள அம்சங்கள் புதிய மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வரைவு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ளது.

English summary
The Criminal Law ( Amendment) Bill, 2018, provides for stringent punishment including death penalty for those convicted of raping girls below the age of 12 years. The proposed bill stipulates stringent punishment for perpetrators of rape, particularly of girls below 12 years. Death sentence has been provided for rapists of girls under 12 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X