For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈரான் உடன் சண்டை.. இந்தியா பக்கம் கவனத்தை திருப்பும் டிரம்ப்.. 4 வாரத்தில் மோடியை சந்திக்க திட்டம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த மாதம் தொடக்கத்தில் இந்தியா வர வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த மாதம் தொடக்கத்தில் இந்தியா வர வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

உலகம் முழுக்க தற்போது மூன்றாம் உலகப்போர் பதற்றம் நிலவி வருகிறது. ஈரான் - அமெரிக்கா இடையிலான சண்டை எப்போது வேண்டுமானாலும் விஸ்வரூபம் எடுக்கலாம்.

விரைவில் இது உலகப் போராக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈராக்கில் டிரோன் தாக்குதல் நிகழ்த்திய அமெரிக்கா ஈரான் குவாட்ஸ் படை தளபதி சுலைமானியை கொலை செய்தது. இதற்கு பதிலடியாக ஈரான் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது தாக்குதல் நடத்தியது.

நடப்பது நல்லதாக தெரியவில்லை... பார்த்துகங்க... காங்.தலைவர்களிடம் கொந்தளித்த திமுக நடப்பது நல்லதாக தெரியவில்லை... பார்த்துகங்க... காங்.தலைவர்களிடம் கொந்தளித்த திமுக

வருகிறார்

வருகிறார்

இதனால் இப்போதே அமெரிக்கா தனக்கு நெருக்கமாக இருக்கும் நாடுகளுடன் நட்பை புதுப்பித்து வருகிறது. ஈரானுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் சில, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் களமிறங்க வாய்ப்புள்ளது. இதனாலும் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக மற்ற நாடுகளை அணி திரட்ட முயன்று வருகிறது.

என்ன நாடுகள்

என்ன நாடுகள்

இதன் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த மாதம் தொடக்கத்தில் இந்தியா வர வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.இதில் ஈரான் பிரச்சனை குறித்து ஆலோசிக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார் என்கிறார்கள்.

இந்தியா எப்படி

இந்தியா எப்படி

ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடையை இந்தியா பின்பற்றி வருகிறது. இதனால் ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது கிடையாது. இதனால் ஈரானுக்கு எதிரான சண்டையில் இந்தியா தங்கள் பக்கம் நிற்கும் என்று அமெரிக்கா நம்புகிறது. இதை உறுதி செய்யவே டிரம்ப் இந்தியா வருகிறார் என்கிறார்கள்.

வேறு ஒப்பந்தம்

வேறு ஒப்பந்தம்

அதேபோல் டிரம்ப்பின் இந்திய பயணத்தில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள், விமான போக்குவரத்து தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். இரண்டு நாட்டு தலைவர்களுக்கும் தோதான தேதியை ஆலோசித்து வருகிறார்கள். அது உறுதியான பின் டிரம்ப் இந்தியா வருவார் என்கிறார்கள்.

English summary
The USA president Trump may visit Indian in next month amidst Iran war crisis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X