For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆக்ரோஷ துர்கை சரி.. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உருவில் அவதரித்த துர்கையை பாருங்கள்!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: இந்த ஆண்டு துர்கா பூஜையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வியலை சொல்லும் சிலைகள் நவராத்திரி விழாவில் வைக்கப்பட்டிருந்தது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

பொதுவாக துர்கா பூஜை,நவராத்திரி, தசரா விழா என மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தில் நவராத்திரி விழா 9 நாட்களும் துர்கா பூஜை என கொண்டாடப்படும்.

இந்த கொண்டாட்டத்தின் போது துர்கா தேவி 10 கைகளுடன் ஆயுதங்களை ஏந்தியபடி மிகவும் ஆக்ரோஷமாக கொல்கத்தா வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள பந்தல்களில் அவதரிப்பார்.

முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பது ஈழத் தமிழரை அவமதிப்பதாகும்... பினாங்கு துணை முதல்வர் ராமசாமிமுரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பது ஈழத் தமிழரை அவமதிப்பதாகும்... பினாங்கு துணை முதல்வர் ராமசாமி

பொதுமக்கள்

பொதுமக்கள்

இதை பார்க்க பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் வருகை தருவர். இந்த ஆண்டும் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் களைக் கட்டத் தொடங்கிவிட்டது. கொல்கொத்தாவில் பரிஷா கிளப் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் அவதரிக்கும் துர்காதேவி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கொரோனா ஊரடங்கு

கொரோனா ஊரடங்கு

அண்மையில் அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கால் பல புலம்பெயர் தொழிலாளர்கள் பல 100 கிலோ மீட்டர் தூரம் நடந்தே தங்கள் சொந்த ஊர்களை அடைந்தனர். கர்ப்பிணிகள், வயதானவர்கள், குழந்தைகள், சிறுவர், சிறுமியர்கள் என பலர் வேலையின்றி ஊதியமும் இல்லாமல் வாடகை கொடுக்க முடியாமல், உணவு செலவுக்கே சமாளிக்க முடியாமல் தவித்தனர்.

குழந்தைகள்

குழந்தைகள்

இதையடுத்து நிலைமை மோசமடைந்ததால் சொந்த ஊர்களுக்கே செல்லலாம் என முடிவெடுத்து அவர்கள் வாகனங்கள் இல்லாவிட்டாலும் நடந்தே சென்றனர். மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு குழந்தைகளையும் இடுப்பில் அமரவைத்து கொண்டு பயணம் மேற்கொண்டனர்.

சமூகவலைதளங்கள்

சமூகவலைதளங்கள்

இதை பார்த்த பலர் மத்திய அரசின் திடீர் ஊரடங்கிற்கு கண்டனம் தெரிவித்தனர். ஆண்களை காட்டிலும் பெண்களே குழந்தைகளை சுமந்து கொண்டு சென்றது சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் இந்தியாவில் ஊரக பகுதிகளை சேர்ந்த பெண்களின் உருவில் துர்கை அவதரித்திருந்தால் எப்படியிருக்கும் என்ற யோசனை கலை இயக்குநருக்கு வந்தது.

சிலைக்கு உயிர்

சிலைக்கு உயிர்

இதையடுத்து அந்த யோசனைக்கு சிற்பி பல்லப் பவ்மிக் உயிர் கொடுத்தார். இதுகுறித்து ரிந்து தாஸ் கூறுகையில் இந்த முறை துர்கா தேவி மூலம் சமூகத்திற்கு கருத்து சொல்ல விரும்பினேன். அதனால் நகைகள் எதுவும் அணியாமல் கையில் ஆயுதம் எதுவும் ஏந்தாமல் குழந்தைகளையும் உணவு தானியங்களையும் ஏந்தியபடி நடந்து செல்லும் வகையில் துர்கா தேவியை வடிவமைக்க விரும்பினேன்.

குழந்தைகள்

குழந்தைகள்

அதில் வண்ணங்கள் ஏதும் இல்லாமல் செதுக்கியுள்ளேன். நான் விரும்பும் துர்கா தேவி பலூன்களை விற்று அதன் மூலம் குழந்தைகளின் பசியை போக்கும் தாயாக இருக்கவே விரும்பினேன். அதனால்தான் இந்த முயற்சி என ரிந்து தாஸ் தெரிவித்துள்ளார்.

English summary
There is a goddess in every migrant mother, an artist designed for Durga pooja Navratri festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X