For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் மேட்ச் பிக்ஸிங்.. காங்கிரஸ் சரமாரி குற்றச்சாட்டு

அதிமுகவுக்கும் மத்திய அரசுக்கும் மேட்ச் பிக்ஸிங் இருப்பதாக காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: அதிமுகவுக்கும் மத்திய அரசுக்கும் மேட்ச் பிக்ஸிங் இருப்பதாக காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளன. இந்நிலையில்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர்.

There is a match fixing between ADMK and BJP: Mallikarjun Kharge

இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர முடியாமல் எதிர்க்கட்சிகள் திணறி வருகின்றன. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் அதிமுகவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மத்திய அரசுக்கும் அதிமுகவுக்கும் இடையே மேட்ச் பிக்ஸிங் இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் மத்திய அரசின் தூண்டுதலின் பேரிலேயே அதிமுக அவை நடவடிக்கையை முடக்குவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஆனால் அதிமுக எம்பியான அருண்மொழிதேவன் காங்கிரஸின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்றும் பாஜகவின் பேச்சைக் கேட்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என்றும் அருண்மொழி தேவன் கூறினார்.

English summary
Congress accuses that There is a match fixing between ADMK and BJP. ADMK freezing Parliament with the knowledge of BJP Mallikarjun Kharge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X