For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருத்து வேறுபாடுகள் இருப்பது உண்மை.. அதை சரி செய்ய வேண்டும்.. போட்டுடைத்த டிகே சிவகுமார்

கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன என காங். மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அமித்ஷா, ரெட்டி கூட்டணியை கர்நாடக மண்ணில் சாய்த்த டி.கே.சிவகுமார்- வீடியோ

    பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன என காங். மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் 104 இடங்களை கைப்பற்றிய பாஜக பெரும்பான்மை இல்லாத போதும் அவசர அவசரமாக ஆட்சியமைத்தது. இதனை எதிர்த்து காங்கிரஸ் - மஜத கூட்டாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    இதில் கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே முதல்வர் எடியூரப்பா பதவி விலகினார்.

    நாளை மறுநாள்

    நாளை மறுநாள்

    இதைத்தொடர்ந்து குமாரசாமி தலைமையிலான மஜத- காங்கிரஸ் கூட்டணி நாளை மறு நாள் கர்நாடகாவில் ஆட்சியமைக்கிறது. இதில் யாருக்கு என்ன பதவி என கட்சி தலைமைகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.

    அமைச்சர் பதவிக்கு மறுப்பு

    அமைச்சர் பதவிக்கு மறுப்பு

    இந்நிலையில் அமைச்சரவை தொடர்பாக காங்கிரஸ் - மஜத இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர், டிகே சிவக்குமார், மஜத கட்சியிடம் அதிக அமைச்சர் பதவி கேட்டதாகவும், மஜத அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

    சரி செய்ய வேண்டும்

    சரி செய்ய வேண்டும்

    ஆனால் அதனை குமாரசாமி மறுத்த நிலையில், கருத்து வேறுபாடு உள்ளது உண்மைதான் என டிகே சிவகுமார் கூறியுள்ளார். கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ்-மஜத நடுவே கருத்து வேறுபாடுகள் உள்ளன என்ற அவர், அதை சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

     எம்எல்ஏக்கள் கலக்கம்

    எம்எல்ஏக்கள் கலக்கம்

    அமைச்சர் பதவி விவகாரத்தில் இரு கட்சிகளிடையே இழுபறி ஏற்பட்டிருப்பது இரு கட்சி எம்எல்ஏக்களிடமும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எம்எல்ஏக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

    English summary
    DK shivakumar says that there is a misunderstanding between Congress and JDS. He also says we have to rectify it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X